பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/328

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1957-58-லிருந்து 42,500 ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணிர் பாய்கின்றது. இதன் செலவு ரூ. 183 லட்சம். திருச்சி மாவட்டத்தில் ரூ. 172 லட்சம் செலவில் அமைந்துள்ள கால்வாயின் உ த வி யா ல் 8, 6 22 ஏக்கர் புன் செய் நிலங்கள் புதிதாகப் பாசன வசதி பெறுகின்றன. ஏரிப் பாசனத்திலுள்ள நிலங்களுக்கும் இது உதவியாகும். புள்ளம்பாடிக் கால்வாய் : திருச்சி மாவட்டத்திற்கு உரியது. இதன் நீளம் 54 மைல். இதனால் 22, 114 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதியுண்டு. செலவு ரூ. 157 லட்சம். சமுதாய நல வளர்ச்சி நாட்டுப்புற மக்கள் சுதந்தரத்தின் நன்மைகளை அடையும்படி செய்வதே காந்திஜியின் கனவாக இருந் தது. அதில் ஒரளவு அரசாங்கத்தின் சமுதாய நலத் திட்டத்தால் நிறைவேறி வருகின்றது. நமது மாநிலத் திற்குரிய 374 வளர்ச்சி வட்டாரங்களில் 254-ல் வேலைகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு வட்டா ரத்திலும் 66,000 மக்களைக் கொண்ட 100 கிராமங் கள் உண்டு. 1963 அக்டோபர் மாதத்திற்குள் மற்ற 120 வட்டாரங்களிலும் திட்டம் அமலுக்கு வந்தது. சமுதாய நல வளர்ச்சிக்காக முதல் திட்டத்தில் ரூ. 75 லட்சமும், இரண்டாவது திட்டத்தில் சுமார் 13: கோடியும் செலவிடப்பட்டது. நகரங்களோடு தொடர் பில்லாமல் தனித் தீவுகளாக ஒதுங்கிக் கிடந்த பல்லா யிரம் கிராமங்களில் இப்பொழுது விழிப்பு ஏற்பட் டிருக்கின்றது. சுத்தமும், சுகாதாரமும், கல்வியும், போக்கு வரத்துச் சாதனங்களும் பெருகி வருகின்றன. விவசாயத்திற்கு வேண்டிய விதைகள், இரசாயன M3 18