பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்ய ஏற்பாடுகள் நடந்திருக்கின்றன. மோட்டார் சக்கரங்கள் முதலியவை தயாரிக்க ஒரு கோடி ரூபாய் முதலுடன் விரைவில் பெரிய தொழிற்சாலை அமையப் போகின்றது. சென்னை முதல் எட்டு நகரங்களில் 'இண்டஸ்டிரியல் எஸ்டேட்ஸ்’ என்ற தொழிற்பண்ணை கள் கட்டப் பெற்றுள்ளன. இவைகளில் பலர் போயி ருந்து தொழில்கள் நடத்தி வருகின்றனர். கூட்டுறவு மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கும், மற்றும் கைத்தொழில் புரிவோர்களுக்கும் பலவித உதவிகள் செய்யப்படுகின்றன. தொழில் துணுக்கக் கல்வியைப் பெருக்குவதற் காகப் பழைய கல்லூரிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்க வசதி செய்தும், நாகப்பட்டினம், சேலம், செட்டிநாடு, பொள்ளாச்சி, ஆவடி, விருதுநகர், தாழையூத்து, அண்னமலை நகர்,காஞ்சிபுரம்,வேலூர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் புதிய தொழிற் பள்ளிகள் தொடங்கியும் பல இளைஞர்களுக்குப் பயிற்சி யளிக்கப் பெறுகின்றது. தமிழகத்தில் தொழில்களில் முதன்மையாக விளங்குபவை ஆலேகளில் நூல் நூற்றலும், நெய்தலும், இவை மிக அதிகமான அளவில் கோவையிலும், மதுரையிலும் நடைபெற்று வந்தபோதிலும், நாடு முழுதிலும் பரவியுள்ள நடுத்தரத் தொழிற்சாலைகள் 139 இருக்கின்றன. தமிழகத்திலுள்ள நூற்புக் கதிர் கள் சுமார் 304 லட்சம்: இயந்திரத் தறிகள் 8,000. மேட்டுப்பாளையத்தில் ரூ. 10 கோடி செலவிட்டு, இத் தாலிய நிபுணர்களின் ஒத்துழைப்புடன், ரயான் முத லிய செயற்கை நூல் உற்பத்திக்கு ஏற்பாடாகி யிருக் கின்றது. இந்தியாவில் உற்பத்தியாகிற சிமிண்டில் 12% தமிழகத்தில் உற்பத்தியாகின்றது. நான்கு தொழிற் 3.20