பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/331

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சாலைகளில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் வீதம் சிமிண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. 1961-இல் 60,000 டன் உற்பத்தி செய்யும் புதுத் தொழிற்சாலை ஒன்றும் அமைந்துள்ளது. இதுவரையிலுமுள்ள தொழிற்சாலை களைவிடப் பெரிதாக 2 லட்சம் டன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை சேலத்தில் அமைந்துள்ளது. சென்ற 1963-இல் அதில் உற்பத்தி தொடங்கியது. இராம நாதபுரம், திருச்சி மாவட்டங்களில் சிமிண்டு உற்பத் திக்குரிய வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் திட்டங்கள் தயாராகின்றன. இரசாயனப் பொருள்களையும், உரங்களையும் தயா ரிக்கக் கோடிக்கணக்காக முதலீடு செய்து தொழிற் சாலைகள் நடைபெறுகின்றன. மேலும் உற்பத்திக்குப் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப் பெறுகின்றன. காகித உற்பத்தி தமிழகத்திற்குப் புதிது. ஈரோடு நகருக்கு அருகில் ரூ. 6 கோடியில் ஒரு காகிதத் தொழிற்சாலை வேலை முடிந்துள்ளது. இது ஆண்டுக்கு 20,000 டன் உற்பத்தி செய்ய முடியும். வைக்கோலி லிருந்து காகிதம் செய்வதற்கு நெல்லை மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலைக்கு வேலை நடந்து முடிந்து, உற் பத்தியும் நடக்கின்றது. இது நாள்தோறும் 10 டன் உற்பத்தி செய்யக் கூடியது. தோட்டங்களும் துரவுகளும் நிறைந்து அமைதி யாகக் காட்சியளித்து வந்த சென்னை மாநகரிலும், சுற் றுப் புறங்களிலும் பெருந் தொழில்கள் பல அமைந் துள்ளன. ஆவடி, திருவொற்றியூர், என்னுார், பெரம் பூர், கிண்டி முதலிய இடங்களில் பற்பல தொழிற் சாலைகள் வேலை செய்து வருகின்றன. மொத்தத்தில் தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சி அபரிமிதமானது என்றே சொல்லலாம். 1956-இல் 4, 618 தொழிற்சாலைகள் இருந்தன; இப்பொழுது இ. சீ. பா.-21 32 I