பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/342

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1,500 பேர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். நம்முடை 27 தேசிய லேபரேடரிகள்' என்னும் ஆராய்ச்சி கூடங்களிலே இங்கிலாந்திலிருந்து கிடைத்துள்ள நுட்பமான ஆராய்ச்சிக் கருவிகளைக் காணலாம். ஜெர்மனியின் உதவி யுத்தத்திற்குப் பின்னல் மேற்கு ஜெர்மனி தன் தொழில்களை வளர்த்துக் கொண்டதுடன், நமக்கும் பெரிய அளவில் உதவி வருகின்றது. மூன்ருவது திட் டத்தின் முதல் இரண்டு வருடங்களுக்கு ஜெர்மனி 4, 230 லட்சம் டாலர்கள் கடன் உதவுவதுடன், உருக்கு உற்பத்தி முதலிய பெருந் தொழில்களுக்கு வேண்டிய இயந்திரங்களை அனுப்பி, அவைகளை இங்கே வந்து நிறுவி நடத்துவதற்குரிய நிபுணர்களையும் அளித்து வருகின்றது. ஸோவியத் ரஷ்யாவின் உதவி 1962 ஆகஸ்ட்வரை ரஷ்யாவின் நிதி உதவி ரூ. 380 கோடி. வர்த்தகத்திலும் ரஷ்ய-இந்திய உறவு வளர்ந்து வருகின்றது. ரஷ்யாவிலிருந்து ரஷ்யாவுக்கு H இறக்குமதிப் ஏற்றுமதிப். வருடம பொருள்களின் பொருள்களின் மதிப்பு == மதிப்பு 1959–60 ரூ. 17,19,00,000 ரூ. 30,88,00,000 1960–61 ரூ. 15,87,00,000 ரூ. 28,81,00,000 I961–62 ரூ. 35,32,00,000 ரூ. 32,07,00,000 நம் மூன்ருவது, நான்காவது திட்டங்களுக்கு மிகுந்த கடன் உதவி செய்யவும், நிபுணர்களே அனுப் 3.32