பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஷ்யாவும் சேர்ந்து நம்மை எதிர்த்தால், அது நமக்கு மேலும் பலவீனமான நிலை. ரஷ்யா எதிர்த்து வந் தாலும், சீன வுடன் வேருெரு வல்லரசு சேர்ந்து வந் தாலும், நாம் வெளிநாட்டாரின் உதவியையே நாட வேண்டியிருக்கும். அந்த உதவி வந்து சேரும்வரை, எதிரியை நாம் மடக்கி வைத்துக் கொண்டிருக்க மட்டும் முடியும். எந்த நாடும் தனியே நின்று ஒரு வல் லரசையோ, கூட்டுச் சேர்ந்துவரும் பகைவர்களையோ எதிர்த்து வெல்ல இக்காலத்தில் இயலாது ; பிறநாடு 'களின் உதவி ஒவ்வொரு நாட்டுக்கும் அவசியம். போர் களில் எப்பொழுது என்ன நேருமென்று முன்னதாக எதிர்பார்க்க முடியாததால், உண்மையாக நமக்கு உதவக் கூடிய நாடுகளை இனி நாம் உதாசீனம் செய்யக் கூடாது. அவைகளோடு இப்பொழுதே அந்தரங்கமான சில ஏற்பாடுகளையும் செய்துகொள்வதுதான் அறி வுடைமையாகும். கோட்டைக்குள் எதிரி புகுந்துவிட்ட பிறகு துருப்பிடித்த வாள்களைத் தேடிப்பிடித்துப் பயிற்சி செய்யத் தொடங்குவது போன்ற செய்கைக்கு இனி இடமிருக்கக் கூடாது. நண்பர்களைத் துாற்று வதும், பகைவர்களை ஆர்வத்தோடு அனைத்துக் கொள் வதும் ஒழியவேண்டும் என்பது கம்யூனிஸ்ட் சீன நமக் குக் கற்பித்த முதற் பாடம். மொத்தத்தில், பலகோடி மக்கள் வாழும் பாரத நாட்டைப் போன்ற மாபெரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்புடைய பீடத்திலுள்ளவர் ஒவ்வொருவரும், இதய உணர்ச்சி யின் வசப்பட்டு முடிவுகள் செய்யாமல், ஆழ்ந்த அறி வையும் பயன்படுத்தி ஆராய்ந்தே செய்ய வேண்டும். தற்காலப் போர்முறைகள் மனித சமூகம் மாறுவதற்கு ஏற்ப, போர் முறைக ளும் மாறிக்கொண்டே வருகின்றன. விஞ்ஞானம் 36 7