பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/378

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வளர வளர, போர்க் கருவிகளும் வளர்ந்து வருகின்றன. முற்காலத்தில் போர் என்ரு ல், சில தளபதிகளும், படைகளுமே கவனித்துக்கொள்ளும் விஷயமா யிருந் தது. இந்த நிலைமை யெல்லாம் மாறி, இக்காலத்தில் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள மக்கள் சமுதாயம் முழு துமே போரில் ஈடுபடும்படி நேர்ந்திருக்கிறது. யுத்த காலத்திற்கேற்ற ஆட்சி, சட்டம், பொருளுற்பத்தி முதலிய யாவுமே தனியாக உள்ளன. போர்க்களங் களிலே மட்டும் குண்டுகள் வெடிப்பது மாறி, இக் காலத்தில் பெரிய நகரங்கள், தொழிற்சாலைகள்' நிறைந்த பிரதேசங்கள் , ஆயுதச்சாலைகள், அரசாங்கத் தலைமைக் காரியாலயங்கள் முதலியவைகளி லெல்லாம் குண்டுகள் வீசப்படுகின்றன. போர்க்கருவிகளும் எண் ணற்ற வகைகளாகப் பெருகியுள்ளன. துப்பாக்கிகள், குண்டுகள், அணுகுண்டுகள் முதலியவற்ருேடு, நச்சுக் காற் று, விஷக் கிருமிகளைப் பரப்பிச் சமூகத்தையே நிர்மூலமாக்கும் விஞ்ஞானப் படைப்புக்கள் முதலியன இராணுவத்தார்களுக்கு உதவியாக வந்துள்ளன. நிலத்திலும், நீரிலும், நீரினுள்ளும், வானவெளியிலும் எதிரிகள் வருவதால், இவை எல்லாவற்றையும் பாது காத்துக் கொள்ளும் வழிவகைகளை மக்கள் கண்டுபிடித் துக் கையாண்டு வருகின்றனர். இந்த நிலைமையும் இப் பொழுது மாறியுள்ளது. ஆளில்லாமல், வாகனமில் லாமல், ஏவுகணைகள் கண்டங்களையும் கடல்களையும் தாண்டிவந்து அழிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து நிற்கக்கூடிய வழிகள் போதியஅளவில் இன்னும் கண்டுபிடிக்கப் பெறவில்லை. அணுகுண்டுகள் முதலியவை பற்றி மேலே குறிப் பிடப்பட்டிருக்கிறது. இந்தக் கருவிகள் வந்தபிறகு, வீட்டில் ஒரு பொத்தானை அழுத்தினல் மின்சார விளக்குகள் எரிவதுபோல், ஒரு பொத்தானை அழுத்தியே 3.68 கர்