பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/379

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


யுத்தம் நடத்திவிடலாம் என்ற அளவுக்கு விஞ்ஞானம் மனிதனுக்கு வசதி செய்துள்ளது. ஆயினும் இந்தக் கருவிகளை வைத்திருக்கும் இடத்தில், இவைகளின் உபயோகம் இவைகளை உபயோகிக்காமல் இருக்கும் வரைதான்' என்று எழுதி ஒட்டிவிடலாம். ஒரு பக்கத் தார் உபயோகிக்கத் தொடங்கினலும், உலக நாசம் நெருங்கிவரத் தொடங்கிவிடும். அணுகுண்டு சகாப்தம் தொடங்கி, 1965, ஜூலை 16-ந்தேதியுடன் 20 ஆண்டு கள் முடிந்து, 21-ஆவது ஆண்டு துவங்கியுள்ளது. அணு ஆயுதங்களல்லாத மற்ற மாமூலாக உப யோகிக்கப்பெறும் ஆயுதங்களும் எல்லா நாடுகளிலும் நிலைத் திருக்கின்றன. விஞ்ஞான வளர்ச்சிக்குத் தக்க படி அவைகள் அவ்வப்போது சீர்திருத்தித் தயாரிக்கப் பெறுகின்றன. இந்த ஆயுதங்களை வைத்துக்கொண்டு போராடக்கூடிய படைகளும் நாடுதோறும் ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. படைகளிலும், பாதுகாப்பு முறைகளிலும் கவனமில்லாத நாடு இன்றைய நிலை யில் அழிந்துபோன நாடாகவே கருதப்படும். வல்லரசு கள். ஆயுதங்களை வேண்டாமென்று விட்டெறியும் வரை, ஆயுத உற்பத்திப் போட்டி நடந்துகொண் டிருக்கும்வரை, ஒவ்வொரு நாடும் தன்னைத்தான் காத்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றது. மேலை நாடுகளில் தோன்றிய நவீனப் போர்முறை கள், போர்த் தத்துவங்கள் முதலியவைபற்றிப் பற்பல ஆசிரியர்கள் அரிய பல நூல்கள் எழுதி வைத்திருக் கின்றனர். சில உள்நாட்டுப் போர்கள் நீங்கலாக, பழங்காலத்துப் போர்கள், முதல் உலகப்போர், இரண் டாம் உலகப் போர் முதலியவைகளைப் பற்றியெல்லாம் இராணுவங்களுக்குத் தலைமை வகிப்போர் அனைவரும் தெரிந்துகொள்வது அவசியம். அவர்கள் மட்டுமன்றிப் பொதுமக்களும் போரைப்பற்றி ஒ ர ள வு தெரிந்து இ. சீ. பா.-24 J 6'9