பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 யவை என்று கோரவில்லை. மேலும் பர்மாவுடனும் நேப்பாளத்துடனும் சீன ஏற்றுக்கொண்டுள்ள எல்லைகள் இந்திய-திபேத்து எல்லையின் தொடர்ச்சியாக இருக்கின்றனவே அன்றிச் சீனா குறிப்பிடும் எல்லையின் தொடர்ச்சியாக இல்லை.

இந்திய-திபேத்து எல்லையான மக்மகான் கோடு சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் அளவெடுத்து, முளையறைந்து, தரையில் கோடு கிழித்து உறுதி செய்யப்பட்டதில்லை என்பது சீனாவின் புகார்களில் ஒன்று. இது உண்மைதான். அதனால் மலை முகடுகளையும், நதிப்படுகைகளையும் கணக்கில் கொண்டு பூகோளப் படங்களில் குறிக்கப் பெற்ற எல்லை, பரம்பரையாகவும், மாமூலாகவும் தொன்றுதொட்டு அனுபவத்திலுள்ள எல்லை, திடீரென்று ஒரு கட்சி ஆட்சேபம் கிளப்புவதால், இல்லாமற் போய்விடுமா? குறித்த எல்லை வரை யார் இதுவரை ஆதிக்கியம் செலுத்தி வந்திருக்கின்றனர் என்பதும் முக்கியமான ஆதாரம் அல்லவா?

இந்திய - திபேத்து எல்லைதான் இப்பொழுது இந்திய-சீன எல்லையாக மாறிவந்துள்ளது. ஏனெனில் திபேத்தில் சீன ஆதிக்கியம் நடைபெறுகிறது. ஆகவே இந்த எல்லையைத் துல்லியமாக அளந்து தரையில் அடையாளம் செய்ய இந்திய அரசாங்கம் தயாராயிருப்பதைச் சீனவுக்குப் பன்முறை தெரிவித்தாயிற்று. அதற்காகத்தான் எல்லை பற்றிய சமரச ஏற்பாடுகள் செய்துகொள்ளவும் அது ஆயத்தமாயிருந்தது. ஆனல் ‘சமரசம்’ என்பதற்குச் சீனா கோரும் 50 ஆயிரம் சதுர மைல் பிரதேசங்களில், கூடுதலாகவோ, குறைவாகவோ, கொடுத்துவிட்டு வெறுங்கையுடன் நாம் திரும்புவது என்பது பொருளில்லை. படத்தில் கோடு கிழிப்பதற்கும், தரையில் அடையாளம் செய்

34