பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 டிருக்கையில், சீனா பின்புறமாக வந்து நம்மைத் தாக்கி விட்டது.

கம்யூனிஸ்ட் சீனர்களுக்கு நாம் கருணை காட்டி வந்தோம்-அதற்கு அவர்கள் நம் கழுத்தை நெரித்து நன்றி காட்டினர். அன்பு காட்டி அரவணைத்தோம். அதற்காக அனல் கக்கும் குண்டுகளை அவர்கள் நம்மீது பாய்ச்சுகின்றனர். வல்லரசுகளோடு அவர்களுக்காக வருடக்கணக்காக வாதாடினாேம்-அதற்கு நன்றியாக ‘வல்லரசுகளின் வால் பிடிப்போர்’ என்று நம்மையே ஏளனம் செய்கின்றனர். மாந்தருள் மாணிக்கமான நம் பிரதமமந்திரி ஜவாஹர்லால் நேரு ‘ஹிந்தி-சீனி பாய் பாய்-இந்தியரும் சீனரும் சகோதரர்கள்’ என்ற கோஷத்தை நமக்குச் சொல்லித் தந்தவர். அவர் ‘அமெரிக்காவின் அடிவருடி’ என்று பீகிங் ரேடியோ இடைவிடாமல் அலறி வந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக 2,000 ஆண்டுகட்கு முன்பு நம் நாட்டுப் பெளத்த பிட்சுக்கள், காவியுடை அணிந்து, காடு மலைகளை யெல்லாம் கடந்து கால்நடயாகச் சென்று, சீனாவில் கருணைக் கடலான புத்தர் பிரானின் தர்மத்தைப் பிரசாரம் செய்து வந்தனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த ஞானத் துறவிகளைத் தவிர ஆயுதம் தாங்கிய ஓர் இந்தியச் சிப்பாய் கூட இமயமலையைத் தாண்டிச் சீனாவுக்குள் நுழைந்ததில்லை. இதற்குக் கைம்மாறாகக் கம்யூனிஸ்ட் சீனர்கள், போர்க் கருவிகளைத் தாங்கி, அணியணியாக நம் வட எல்லையைத் தாண்டிவந்து, நம் நாட்டை ஆக்கிரமித்தனர். பால் போல் பனிபடர்ந்த இமாலயப் பிரதேசத்தில் நம் வீரர்களின் செங்குருதியைப் பெருக்கி, நிலத்தை யெல்லாம் சிவப்புச் சேறாக்கினர். பறவைகளின் இன்னிசையைத் தவிர வேறு ஒலிகளையே அறியாத நம் பனிமலைச் சாரல்களில் செவிகள் செவிடுபடும்

41