பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


எடுத்துக்காட்டாகும். அவர்கள் வெள்ளிப் பdp வரையின் உச்சியைக் கண்டது உலகம் போற்றும் வெற்றியாயிற்று.

1965 மே மாதம் மூன்று இந்திய-நேப்பாளக் குழுவினர்கள் மும்முறை கெளரி சங்கரின் உச்சிவரை வெற்றியுடன் ஏறி இறங்கியுள்ளனர். மே மாதம் 20-ந் தேதி காப்டென் ஏ. எஸ். சீசமா, நவாங் கோம்பு என்ற இருவரும் அச்சிகரத்தின் உச்சியில் அரைமணி நேரம் தங்கியிருந்தனர். மே மாதம் 22-ந் தேதி சோனம் கியாட்சோ, சோனம் வங்கியால் என்ற இருவர் 50 நிமிடங்கள் உச்சியில் இருந்தனர். மூன்றாவது குழுவினரான ஸி. பி. வோராவும், அங்க் காமியும் மே 24 ந் தேதி காலை 10-45 மணிக்குச் சிகரத்தின் உச்சியிலேறிக் காட்சியளித்தனர். இந்த அரிய வெற்றிகளை நம் ராஷ்டிரபதியவர்களும், அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும், மற்றும் பிற நாட்டவர்களும் மிகவும் பாராட்டிப் புகழ்ந்துள்ளனர்.

இந்தக் கெளரி சங்கர் மலைக்கு எவரெஸ்ட் என்ற பெயர் எப்படி உண்டாயிற்று? சென்ற நூற்றாண்டின் நடுவே இந்தியாவில் ஆங்கில ஆட்சி நடந்துகொண்டிருக்கையில், அரசாங்கத்தில் சர்வேயர் ஜெனரலாக வேலை பார்த்தவரின் பெயர் ஸர் ஜியார்ஜ் எவரெஸ்ட் (1790-1866). அவர் இமயமலைத் தொடர்களைப் பற்றியும், அந்தப் பிரதேசத்தைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்து தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்தவர். அவரை நன்றியுடன் நினைவு கொள்வதற்காக இமாலயத்தின் இணையற்ற சிகரத்திற்கு அவர் பெயரே சூட்டப்பெற்றது. அது முதல் உலகத்தார் அதை ‘எவரெஸ்ட்’ என்றே வழங்கலாயினர். ஆனால் பாரத மக்கள் அதற்கு இறைவன் பெயரையே சூட்டிக் கெளரி சங்கர் என்று அதனைப் போற்றிப் பரவி வருகின்றனர்.

4