பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 யும்படி செய்தவர் காந்தியடிகள். அவருடைய மேன்மையையும், ஆற்றல்களையும் பற்றி அறிஞர்கள் பலவாறு புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். ஒர் ஆசிரியர், ‘உலகம் இதுவரை கண்டுள்ள ராணுவத் தளபதிகளில் காந்திஜியே தலைமையானவர்’ என்று குறித்துள்ளார். காந்திஜி துப்பாக்கியே தூக்கியறியாதவர். ஆயினும் அவர் தளபதியே: தளபதிகளில் தலைமையானவரே ! உலகின் பல பாகங்களில் பரவியிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ராணுவ வல்லமை அனைத்தையும் எதிர்த்து, அந் த வல்லமையைப் பயனற்றதாக்கி வெற்றிகொள்ளும் புதிய போர்முறை ஒன்றை வகுத்தவர் அவரே. பெரிய கண்டம் போன்ற பாரத நாட்டை ஐக்கியப்படுத்தி, வீரம் புகட்டி, நிமிர்ந்து நிற்கச் செய்தவர் அந்த மகாத்மாவே.

அந்த மகாத்மா காட்டிய வழியிலிருந்து பின்னால் நாம் வெகுதுாரம் விலகிவிட்டோம். ‘ஈட்டிகளின் முன்பும் ஒன்றி நில்லுங்கள்! குண்டு மழை பொழிந்தாலும் சத்தியமே பேசுங்கள்!’ என்று அவர் சிங்கநாதம் செய்து கற்பித்ததுபோல் இனி யார் செய்யப்போகின்றனர்! அவர் எங்கிருந்தாலும், நாட்டின் எந்த மூலையில் எது நடந்தாலும், கவனித்துவந்தார். எங்கெங்கு தவறுகள் நேர்ந்தாலும் அவர் ஆணித்தர மாகக் கண்டித்துவந்தார். புகார்களை யெல்லாம் தக்க நண்பர்கள் மூலம் விசாரித்துத் தம் முடிவுகளைப் பத்திரிகைகளில் வெளியிட்டும், சொற்பொழிவுகளில் விளம்பரம் செய்தும், கடிதங்கள் எழுதியும், தயவு தாட்சண்யமில்லாமல் நடந்து கொண்டார்.

அவருக்கு வலது கையாக விளங்கிய ஸர்தார் வல்ல பாய் பட்டேல் சுதந்தர இந்தியாவின் உள்நாட்டு அமைச்சராயிருந்து ஆற்றிய பணிகளை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான்

76