பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பிரிந்த நிலையில், பெரிதும் சிறிதுமான 600 இந்திய சமஸ்தானங்களைப் பாரதப் பேரரசுடன் கலந்துவிடும்படி செய்தவர் அவர், ஆடம்பரமான பட்டு அங்கிகளும், நவரத்ன அணிகளும் அணிந்து விளங்கிய அரசர்களும், மகாராஜாக்களும் தங்கள் மணிமுடிகளைக் கழற்றி வைத்துவிட்டு, அரசாங்கம் அளிக்கும் ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு போகும்படி செய்தவர் அவர். இவ்வாறு சமஸ்தானங்கள் முதலிலேயே இணைக்கப் பெறாமலிருந்தால், எத்தனையோ சண்டைகளும் குழப்பங்களும் ஏற்பட்டு நாடு சீரழிந்திருக்கும். 1947 இல் நாடு சுதந்தரமடைவதற்கு முன்பே, எந்தெந்த சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் சேர்ந்து, உள்நாட்டில் கலகம் செய்ய வேண்டுமென்று ஏற்பாடாகியிருந்தது. மற்றும் சில பெரிய சமஸ்தானங்களும் வெளியிலிருந்து வரும் வல்லரசுகளுக்கு ஏற்ற தளங்களாக மாறியிருக்கும். அவ்வாறெல்லாம் ஏற்படாமல் காத்தவர் நமது ஸர்தார். கடைசியாக மிகப் பெரிய சுதேச சமஸ்தானமான காஷ்மீரும் இந்தியாவுடன் இணைந்து நன்மையடையும்படி செய்யப்பெற்றது.

சுதந்தரப் போரில் தலைமை வகித்த பெருந்தலைவர்களிலே பெரும்பாலோர் நாளடைவில் மறைந்துவிட்டனர். பழைய பாரதச் சக்கரவர்த்திகளிலே எவரும் தாங்கியிராத பெரும் பொறுப்பைப் பிரதம மந்திரி நேரு தனியே தலையில் தாங்கிவர நேர்ந்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் ‘கண்ணியம், கவசம், கேடய’ மாக விளங்கிவந்தது. அது ஒரு தனிக் கட்சியன்று, இந்திய மக்கள் அனைவரின் சார் பாகப் பேசக்கூடிய பொது ஸ்தாபனம் என்பதை மகாத்மா பன்முறை ஆங்கில அரசுக்கு எடுத்துக் கூறி வந்தார். ஆனல் சுதந்தரத்திற்குப் பின், அது ஒரு கட்சி போலவே செயற்பட்டுவந்தது. காங்கிரஸ்தான்

77