பக்கம்:இந்தியா எங்கே.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 103

வான்

வான்

பார்க்க ஒரு சிறு அவகாசம் கூடக் கிடைக்க வில்லை. அப்படித்தானே. -

. வேல்விழி எங்கும் போராட்டம். உலகமே ஒரு

யுத்த வயல். அதில் என் வைராக்கியம் ஒரு முடிவற்ற ரணகளத்தில் உறுதிச் சங்கநாதம் செய்கிறது. இப் போர் உனக்கும் எனக்கும் மட்டுமல்ல, உலகரங்கின் பொதுக்காட்சி. இரவும் பகலும் போரிடுகின்றன. பனியும் வெயிலும் போரிடுகின்றன. நீருக்கும் நெருப்புக்கும் போராட்டம். இன்பமும் துன்பமும் சண்டை இடுகின்றன. வாழ்வும் தாழ்வும் அப்படித்தான். கரையும் கடலும் பிணங்கிச் சாடுகின்றன. ஏன்? கணவனும் மனைவியும்கூடச் சண்டை இடு கின்றனர். ஆகவே போராட்டமே வாழ்வு. மனித

சரித்திரத்தையே போராட்டம் என்னும் ஏட்டின் மீதுதான் இன்று வரை பேராசிரியர்கள் எழுதி

வைத்துள்ளார்கள். அவர்கள் அடிச்சுவட்டை நாமும் பின் பற்றித்தானாக வேண்டும். இனி

தாமதித்தால் வருங்காலம் நம்மை நிந்தனை செய்யும். நமது மனசாட்சியே நம்மைச் சபிக்கும்.

நான் போரை நிறுத்தினால், நமக்காக ஒதுக்கப்

பட்டுள்ள காலவரலாற்றின் ஏடுகளில் பனித்

தீவின் பேய் நடனச் சித்திரங்கள் தான் முதல்

இடம் பெறும். அது உனக்குச் சம்மதமா? உன் மனப்போரைச் சாமர்த்தியமாகச் சமாளித்துக்

கொள். என்னைக் கொல்ல வல்ல மனிதன் உலகில் இன்னும் பிறக்கவில்லை என்பதை உறுதியாக நம்பு. என்னை நீ நம்புவது உண்மை யானால், என் சொற்களை இப்படி சந்தேகப் புத்தியோடு உதாசீனப்படுத்துவது ஏன்? சரி போகலாம். சற்றே உட்காருங்கள்.

மீண்டும் நான் புறப்படுகையில் வழி மறிப்ப தில்லை என்றால் தான் உட்காருவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/105&oldid=537667" இலிருந்து மீள்விக்கப்பட்டது