பக்கம்:இந்தியா எங்கே.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - 115

மேலும் அறைந்தான். அதிகாரி தரையைத் தழுவினான், வாவிட அடிமையைப் பிரபுக்கள னைவரும் தாவிட் பற்றினார்கள், கயிற்றால் சுற்றினார்கள் வற்றிய அவன் சதைப் பிடிப்பை முற்றுகையிட்டன. சாட்டையடிகள் வழிந்தது ரத்தம், வாடிற்று வதனம். ஆனால் விழவில்லை தரையில், வியந்தது மண்டபம். இவன் தான் அன்பு நாட்டின் தவப்புதல்வன். அடிமை வியாபாரத்தை அகற்ற உளங்கொண்ட உத்தமன். பெயர் வாழைகன், பிறப்பால் பூரண எழில் வாய்ந்தவன். அடிமையாய் விலைக்கு வாங்கப் பட்டபின், மண் மூடி மாணிக்கம்போல் மாசுற்றான். மெளனிபாப் நின்றான். அவன் பேச்சைக் கேட்க அங்கு ஆளில்லை.

பேசுகின்றான் மகா பிரபு மன்மதசகாயணன்

மன் - சகா : அடிமை நாயே! முரட்டு மிருகமே! அநாகரீகக்

மறுபிரபு

கொழுப்பு உன் கையை நீட்டமாக்கி விட்டதா?

எங்கள் தலைவர் இன்பவாகனர் கொலு வீற்றிருக்கும் போதா இந்த அநியாயம்?

மன் - சகா: மன்னிக்க முடியாதது. மலைபோன்ற குற்றம்.

பிரபு 1 :

பிரபு 2 :

பிரபு 3 :

மன்

அதி

மன்

தீவிரமான தப்பிதம். தண்டிக்க வேண்டிய கொடுமை. உணவைக் குறைத்துப் போடாததால் நேர்ந்த உடற்திமிர்.

(அடிபட்டு உட்கார்த்திருந்த அதிகாரியைப் ப7ர்த்து அட அதிகாரி! (முதுகை நெளித்த வண்ணம்) பேய் போல் அறைந்து விட்டான். பெயரில்லா அடிமை நாய். அதைப்பற்றிக் கவலைப்படாதே. வலித்தாலும் வெளியில் சொல்லாதே. நடந்ததென்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/117&oldid=537680" இலிருந்து மீள்விக்கப்பட்டது