பக்கம்:இந்தியா எங்கே.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

வில்லி

இன்ப

வில்லி

வில்லி

இன்ப

வில்லி

இன்ப

இ.எ .10

நம தாய

மடியில் தவழத்தான் விருப்பமாக்கும்?

இல்லை. அவர் திருவடிச் சேவையைத்தான்

விரும்புகிறேன்

ஒரு வேளை என்னைச் சோதிக்க இப்படி

எல்லாம் பேசுகிறீர்களா? தோழி! சந்தேகிக்காதே. பிரபு வம்சத்திலே பிறந்தது என் குற்றமல்ல. நல்லறிவு கொண்ட சில மிருகங்களை நீ பார்த்ததில்லையா? அதைப் போல், விதிவிலக்காக நானிருப்பது ஆச்சரியத் துக்கு உரியதாயிருந்தாலும் நம்பத்தகாக ஒரு பொய்யல்ல. செயலில் அறிந்துகொள். இல்லையம்மா! மண்ணிலே பிறந்த மாண்புடைய தங்கம் தாங்கள். தங்கள் அன்புநிறைவேற, நான் ஒரு கருவியாக உபயோகப்படுவதே நான் செய்த தவம், உங்கள் ப்ரேமைத் தந்தியின் வழியாக, தூது சொல்லும் காற்றாயிருப்பதில், நான் வாழ்நாளில் பட்ட துயரத்தையும் மறக்கிறேன். இவ்வளவுக்கும் எதிராக இருப்பது, உங்களைப் பெற்ற தந்தையல்லவா? தந்தை, தன்மையான சூழ்நிலையில் புகாத குற்றவாளி. கோடை இடியைத் துணிக் குடையால் தடுக்க முயற்சிக்கிறார். மலையருவிக்கு மணலால் அணை கட்டுகிறார். எல்லாம் வீண் வேலை.

சூரியனைத் தடுக்கத் தமது ஐந்து விரல்கள்

மட்டும் போதும் என்று எண்ணி விட்டார்.

தாங்கள் இளவரசர் ஞானதேவரை மணம்'

செய்து கொண்டு, மகாராணியாக வேண்டு மென்பதற்கு மன்னர் இன்பவாகனரும், உங்கள் தந்தையும் என்னென்னவோ திட்டம் போடு

கிறார்களே.

அவர்கள் திட்டம் என் கட்டுப்பாட்டை ஒன்றும் செய்யமுடியாது வில்லி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/148&oldid=537713" இலிருந்து மீள்விக்கப்பட்டது