பக்கம்:இந்தியா எங்கே.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 185

Gh kfr Göff

பாட்டு

அடா அடிமைத் தோழனே உன் உயிர் கட்டற்ற சுதந்திரத்தை நாடிச் சென்றதா? இந்த இருட்டுச் சுரங்கத்தை விட்டொழித்து, பேரருட் ஜோதி யிலே கலந்துவிட்டதா? அல்லடா அல்ல. பிரபுக்

களுக்காக பொன் தோண்டும் சேவையிலே

தியாகம் செய்த அடிமையடா நீ உன் போன்றோ ருடைய எண்ணற்ற எலும்புக் கூடுகளையே ஆகாரமாகத் தின்று பொன்னைக் கருத்தரித்த இச்சுரங்கம் தரும் தங்கத்தைக் கொண்டு தானடா நம்மவரை அடிமைகளாகச் சந்தையில் வாங்கு கிறார்கள். இப்போதாவது இந்த உண்மை உனக்குப் புரியுமென்று நினைக்கிறேனடா தோழா! நீ கண்டு கொண்ட உண்மையை எங்களுக்கெல்லாம் வாய் திறந்து சொல்லடா! ஒ உனக்கு வாய்ப்பூட்டுச் சட்டமிருக்குதென்று பயப்படுகிறாயா பயப்படாதே. உனக்காக நான் பேசுகிறேனடா, அடா தோழர்களே! இங்கு வாருங்கள். நான் சொல்வதைக் கேட்காவிட்டால், இவன் அடைந்த நிலையை நானே உங்களுக்குத் தந்து விடுவேன். இந்தக்கணம் முதல் நாம் சுதந்திர மக்களடா. இதோ இச் சுரங்கத்திலே பின்னி ஒடும் இந்தத் தங்கக் கொடிகள் தானடா, அவர்களின் ஆதிபத்ய இரத்தம் ஓடும் நரம்புகள். இச் சுரங்கத்துக்கு நமது உயிர்களைப் பணயம் வைத்துப் பொன் தோண்டித் தரும் வேலையை நிறுத்திய விநாடியே பிரபுக்களின் ஆணவ ஒட்டம் அசைவற்றுப் போகுமடா. பொன்னில் லாவிட்டால் நம் பெண்களை அவர்கள் மாம் பழங்கள் போல் சந்தையிலே வாங்கிச் சுவைத்து எறிய முடியாதடா அடா கேளுங்கள்.

நாயொன்றைக் காவல் செயக்கட்டிவைத்தால்

அதுகூட வெளிச்செல்ல ஊளைசெய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/187&oldid=537754" இலிருந்து மீள்விக்கப்பட்டது