பக்கம்:இந்தியா எங்கே.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.டி. சுந்தரம்

19


இருந்த பலத்தைக் கொண்டு எதிர்த்துப் போராடினார்கள். கட்டுப்பாடான பகைவனை சிதறிக்கிடந்த சுதேசிகளால் ஓட்ட முடியவில்லை.

 அவனிடம், நவீன பீரங்கிகள் இருந்தன. இவர்களுக்கு அந்தச் சாதனங்கள் மிகவும் குறைவு. ஆகையால் வீர மிருந்தும் வெற்றி காண முடியவில்லை.
 இப்படியாக சுதந்திர கோபுரத்தில் ஏறத்துடித்த இந்திய வீரம், முதற்படியிலேயே தடுக்கி வீழ்ந்து முழங்காலை முறித்துக் கொண்டது. இச்சமயம் பார்த்து ஆங்கிலேயன் தனது சக்தியைப் பலப்படுத்திக் கொண்டான். அதற்கான சகல முயற்சிகளிலும் சாகசமாக வெற்றி பெற்றான்.
 1857-இல் இந்தியாவில் எழுந்து குமுறிய எரிமலைப் புரட்சி அடங்கியது போல் காணப்பட்டாலும், நீறு பூத்த நெருப்பாகத்தான் இருந்தது. அடுத்த ஐம்பது ஆண்டுகளில் அந்த எரிமலை நாடெங்கும் பரவலாகக் கிளம்பிற்று. சீறியெழுந்து, பகை நெருப்பை வாரி வாரி வீசியது.
 சுகமான சிங்காரத்தில் வீற்றிருந்த பிரிட்டிஷ் சிங்கத்தை நமது எரிமலைகளின் சீற்றம் பயமுறுத்தியதே தவிர, பழி வாங்க முடியவில்லை. இடையில் இந்திய எழுச்சிக்கு ஒரு அணை போட்டபோது முதல் உலக மகாயுத்தம் (1914-16) வந்து குறுக்கிட்டது. உலகை எண்ணிக் கொஞ்சம் ஓய்வு கொண்டது நமது விடுதலைப் பாசறை.
 போர் முடிந்தது. வெள்ளையன் சொன்னபடி நடக்க வில்லை. அதற்கு மாறாக நடந்தான். விடுதலைப் புரட்சியின் அஸ்திவாரத்தையே அழிக்கத் திட்டமிட்டான். இந்தியரை என்றுமே மீளா அடிமைகளாய் கட்டியாள எண்ணி, அடக்கு முறையை அவிழ்த்து விட்டான். வீரரை வேட்டையாடினான். மடிந்தனர்; மாய்ந்தனர்; மாவீரர்கள்.
 யுத்தத்தின் ஞாபகார்த்தப் பரிசுகளாக இந்தியர்களுக்கு பஞ்சாப் படுகொலை, ரெளலட் சட்டம், பீரங்கிக் குண்டுகள், ஆயுள் தண்டனை, தூக்குமேடை, தடியடி இவைகளைத் தான் அள்ளி அள்ளிக் கொடுத்தது ஆங்கில ராஜதந்திரம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/21&oldid=1401714" இலிருந்து மீள்விக்கப்பட்டது