பக்கம்:இந்தியா எங்கே.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுத்தரம் 55

வாழ முடியாது. ஒரு லட்சம் ஒட்டைக் குடிசைகளுக்கு மத்தியிலே ஒரு ஒய்யார மாளிகை இருக்க முடியாது. நாட்டு மக்கள், பட்ட மரங்கள் என்று எண்ணி ஏமாற வேண்டாம். அந்த மர்ங்களுக்கு எரியும் சக்தியுண்டு. ஒன்றுக்கொன்று உராய்ந்தால், திடீரென காட்டுத்தி சீறியெழும் நாட்டில் எங்கும் செந்நிறத் தீ பரவும். அதிலே சர்வமும் நாசமாகலாம். ஆகவே, நாடு சிவந்த தீயாக மாறுமுன், செழிப்பாக்க வேண்டிய ஏற்பாட்டை செய்வதற்குரிய தேசீய வீரம் வேண்டும். அரசியல் நேர்மை வேண்டும். ஆத்மீகத் துணிச்சல் வேண்டும். இதயத் துய்மை வேண்டும். நிர்வாகத் திறமை வேண்டும். இந்த நல்வாழ்வுப் போர்க்களத்திலே அவசியமானால். உயிரையும் தியாகம் செய்யும் ஆண்மை வேண்டும். மன்னர்களுக்குப் பதிலாக மந்திரிகள் ஆள்வது தான் சுதந்திரத்தின் பலன் என்ற மாய எண்ணம் மாறத்தான் வேண்டும். என்ன செய்வது? மன்னர்களை மாற்றினோம்; நாம் மாறக்கூடாதா?

“ஒட்டைப் போட்டால் நாட்டை முன்னேற்றுவோம்” என்று நீட்டி முழக்கினோம். ஐந்தாறு தேர்தல்களை ஒட்டிவிட்டோம்! இருபத்தாறு ஆண்டுகளை வரலாற்றின் இருட்டறையிலே. போட்டுப் பூட்டி விட்டோம். நாம் மக்களுக்குக் காட்டிய வழி என்ன? கூட்டிய பலன் என்ன? என்று கேட்கிறதே உலகம், அந்த உலகத்தைவிட உரத்த குரலில் நம்மைக் கேட்கிறதே நம்முடைய மனச்சான்று “ஏ மனிதா சுதந்திரம் யாருக்கு? சுகந்தான் யாருக்கு? நமது முன்னேற்றத்திற்கா? நாட்டின் முன்னேற்றத்திற்கா? இந்த வினாவிற்கு விடை கூறுவது யார்?

சிந்திக்காமல் நிற்கும் நீங்களா?

சிங்கம்போல் சீறி நிற்கும் சின்னத் தம்பியா? இந்த விஸ்வரூப வினாவிற்கேற்ற விடையை விவிைல் சொல்லுங் கள். சொல்ல வேண்டாம்; செய்து காட்டுங்கள்! பார்க்கலாம்! ஒராயிரம் ஆண்டு ஒய்ந்து கிடந்த பின்னர் வாராது போல் வந்த வீர சுதந்திரம் உங்களுக்கு வேண்டுமா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/57&oldid=537617" இலிருந்து மீள்விக்கப்பட்டது