பக்கம்:இந்தியா எங்கே.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இந்தியா எங்கே?

வேண்டாமா? வீரர்கள் பெற்றுத் தந்த வீர விடுதலைச் செல்வம் உங்களுக்கு வேண்டுமா வேண்டாமா? வேண்டும் என்றால் தேசபக்தியைக் காப்பாற்றுங்கள். தியாக வரலாற்றைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பாருங்கள்! கடமை புரியும், அதோ இருபெரும் கலங்கரை விளக்குகள் தெரிகின்றன: ஒன்றில் உலக உத்தமன் மகாத்மாவின் திருமுகம் தெளிவாகத் தெரிகிறது. மற்றொன்றில் மாவீரன் லெனின் காட்டும் நகைமுகம் தெரிகிறது. தெரிகிறதா? இரண்டு ஒளிகளின் சந்திப்பில் சிறந்த மற்றொரு புதிய வண்ண ஒளியும் தெரிகிறது!

மகாத்மா சொன்ன மார்க்கத்தை மறந்துவிட்டோம்; இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை நமது இதயத்தைக் கசக்கிப் பிழிகிறது. மண்டை ஒட்டை தகிக்கிறது. இச்சமயத்தில் கவிதை மனம் சும்மா இருக்க வில்லை. தனது அதிர்ச்சியை எழுத்தாக்குகிறது.

இருபதாம் நூற்றாண்டின் மகாகவிஞன் பாரதியின் கடைசி ஆணை. இனி ஒரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம் என்ற மகா மந்திரமும் நமது ஆத்மாவை துடிக்கச் செய்கிறது! என்று அந்த விதியை உருவாக்கப் போகிறோம்? அந்த ஒரு விதி வகுக்கப்பட்டால் இந்திய மண்ணில் பிச்சைக்காரன் இருக்க மாட்டான்; பட்டினியும் சோம்பலும் பறந்து போகும்; நாடு புதுவுலகப் பார்வையில் சிறந்து வாழும், இந்த நல்ல காரியத்திற்கு இடையூறாக உள்ளவைகளை உடனே தகர்த்தெறிந்தெ ஆகவேண்டும்.

நல்லவர்களும் வல்லவர்களும் சமுதாயத் தொண்டு செய்ய முன்வராமல், சலிப்படைந்து பின்தங்கிப் போன தற்குக் காரணம் பணத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் வியாபாரத் தேர்தல்தான். இன்று நடைபெறும் தேர்தல் தெருச் சண்டையில், மகாத்மா காந்தி அவர்களே வந்து ஒரு தொகுதியில் நின்றால்கூட அவர் வெற்றி பெறுவது சந்தேகந்தான்! 'பாவம்! மகாத்மா உண்மை பேசுகிறார். அவர் மகாத்மாவாயிருக்கலாம் ஆனால் அரசியல் தெரியாதவர்” என்று ஒதுக்கி விடுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/58&oldid=537618" இலிருந்து மீள்விக்கப்பட்டது