பக்கம்:இந்தியா எங்கே.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 59

இந்தியா எங்கே?

(எஸ்.டி.எஸ்)

வீரசுதந்திர சக்தியைக் கடையில்

விலைகள் பேசலாமா? அதுவும்

வியாபாரிகளின் உரிமைகள் என்றால்

விடலாமா சும்மா? -

பச்சைக் குழந்தைகள் உணவைத் திருடும்

பேய்களை விடலாமா? அந்தப் பேய்களைப் பெரிய மனிதர்கள் என்றால்

பயந்து ஓடலாமா?

உணவுப் பொருளில் கலப்படம் செய்து

விலையை ஏற்றலாமா? அந்தக்

கடையனைப் பெரிய கோடீஸ்வரன்எனக்

கவிகள் பாடலாமா?

சம்பளம் ஆயிரம் ஆயிரம் தந்தும் கிம்பளம் பெறலாமா? அந்த

வஞ்சகலஞ்சப் பாவியைப் பதவியில்

வைத்திருக்க லாமா?

கட்சிகள் தேர்தலில் காசுபணங்கள் -

கொள்ளை கொள்ளலாமா? கழுகு

பட்சிகள் 'காகா போல் பறந்தே

பணம் அடிக்கலாமா?

அக்ரமங்களைச் செய்வோர் தம்மை

அப்பா எனலாமா?

சக்கரம் உடைந்த ரயிலிலே ஏறி

சனங்கள் சாகலாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/61&oldid=537622" இலிருந்து மீள்விக்கப்பட்டது