பக்கம்:இந்தியா எங்கே.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 81

காலம் : மாலை இடம் : குகை

(வாணியம்மை கண்ணிர் சொரியும் காட்சி. அவள் மனோ சாட்சியின் எதிரொலி) -

வாணி :

ஆண்டவா! ஒருவன் கோபுரத்தின் சிலையாக இருக்கிறான். மற்றொருவன் புழுதியின் பூச்சியாகி நெளிகிறான். இந்த உலக நிலை முடிக்க முடியாத விதியா? மடையர்களை மலை மீது வைக்கிறாய். அறிஞர்களைச் சேற்றிலே தள்ளுகிறாய். குற்ற வாளியை நீதிபதியாக்குகிறாய், நிரபராதியைக் தைது செய்கிறாய். பெண்ணின் கண்ணிர் யுக யுகாந்தரங்களாகப் பெருகிக் கொண்டேயிருக்க வேண்டியது தானா தாய்க் குலமான பெண்மை யையே தின்று, கொழுத்து வேட்டை நாய்களாகி விட்ட பணித் தீவின் பிரபுக்களும் தான் வாழ் கின்றார்கள் தாங்கள் மனித சென்மம் என்பதையே மறந்து இந்த நாட்டு மக்களும் தான் மானமிழந்து வாடுகின்றர்கள். நீதிக்கும், அநீதிக் கும் வேற்றுமை இன்றி ஒன்று கலந்த வஞ்சக உலகத்தின் மாயத்திரை மாறப் போவதில்லையா? உம். மாறுமென்ற நம்பிக்கை எனக்கில்லை. அப்படி மாற வேண்டிய காலம் வந்திருந்தால், என் ஒருவள் வாழ்க்கையில் நடந்த சொல்ல முடியாத கொடுமை ஒன்றே போதாதா? அல்லல் பட்டு ஆற்றாது அழுத என் கண்ணிர்த் திவலை கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு நாட்டை நாசமாக்கும் பழி கலந்ததாயிற்றே. ஆண்டுகள் பலவாகியும், எனது உள்ளத்தில் என் மைந்தனை மறக்க முடியவில்லையே. இரத்த பாசம் கூடவா பொய்யாய்ப் போய் விட்டது? தாயன்பு அழிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/83&oldid=537645" இலிருந்து மீள்விக்கப்பட்டது