பக்கம்:இந்தியா எங்கே.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

வேல்

வாணி :

வேல்

இடம்

நம் தாய்

வஞ்சகருக்குக் கூட்டிக் கொடுக்க பெரிய எதிரி, ஆதலால் வானழகனை விட உனக்குத்தான் எச்சரிக்கை அதிகமாக வேண்டும்.

ஆபத்தின்றி அழகு வாழ முடியாதா தாயே! முடியாதம்மா. கருங்காகத்தைப் பிடிக்க யாராவது வலை வீசுகிறார்களா? இல்லை. ஆனால் பச்சைக் கிளியைக் கூட்டில் அடைத்துக் கொஞ்சுகிறது உலகம். இது அழகின் மோகன போதையிலே எழுந்த ஆசை வெறியாலல்லாவா ஆகவே நமது வாழ்வின் ஒவ்வொரு விநாடியிலும் எச்சரிக்கை வேண்டுமம்மா. சரி எங்கே வானழகன்? அவ்வளவு கூறியும் தலை நகரத்துக் குள்போய் விட்டானா? இல்லையம்மா. எங்காவது வேட்டைக்குச் சென்றி ருப்பார் வந்து விடுவார். இன்று ஒரு கரடியைக் கொல்லாமல் திரும்புவதில்லையென்று கூறிச் சென்றாரம்மா.

(திருப்புக் காசி)

காலம் : நள்ளிரவு

பொன்மேனிராயன் அந்தரங்கப் படுக்கையறை

(பொருளைப்பற்றி மனிதனுக்கு எழும் பேராசை முடிவின்றிப் பெருகிக் கொண்டேயிருக்கும் வினோத மனோதத்துவத்தைச் சித்தரிக்கும் பாடல். அதனால் அவன் மனம் அடையும் குழப்பமான பூகம்பம் பாட்டில் எதிரோவிக்கட்டும்)

(ஒரு பெரிய கொப்பறை நிறையத் தங்கக் கட்டிகள் நிறைந் திருக்கும் தனது அதிர்ஷ்டத்தை எண்ணியெண்ணி இறுமாந்து திரிகிறான் பொன்மேனிராயன் அதைப் பார்க்கிறான் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/86&oldid=537648" இலிருந்து மீள்விக்கப்பட்டது