பக்கம்:இந்தியா எங்கே.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

பொன் :

பொன் :

பொன் :

நம் தாய்

இக் கேள்விக்கு விடையைத் தேட முயற்சி செய். அதற்கேற்ற தீர்ப்பு வர இந்த ஒரு சென்மம் உனக்குப் போதாதப்பா. - - நான் அழிவற்றவன். ஏனென்றால் பிரபுக்கள் அழிவதில்லையென்று தலையணை போன்ற பெரிய புத்தகங்கலேலாம் அன்று முதல் இன்று வரை ஒயாது ஒலமிடுகின்றன. நானென்ற அகந்தை பிடித்தவனே! செயலற்றுப் போன புராண ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாயா? நம்பிக்கையற்ற நாசத்தையே ஊளை யிடும் ஒநாய் ஏடுகளின் வியாக்யான அகராதியை, உன் படுக்கையிலிருந்து எடுத்து வெளியில் எறிந்து விட்டு, சத்திய இலக்கியத்தைப் போய்ப் பாரடா! நல்லது தெரியும் அழிவில்லையா உனக்கு? உன் சவத்தைப் புதைத்தால், மண்ணாகி விடுமடா எரித்தால் சாம்பலாகி விடுமடா. தாகமெடுத்த போதெல்லாம் தங்கப் பஸ்பத்தையே கரைத்துக் குடிக்கிறேன். காய கற்பமாகி விட்டது உடல். மேனி எங்கும் தங்கமயச் சதைகள் சிங்காரமாய்த் திகழும்

பொன்மேனிராயன் நான் தெரியுமா?

அவசரப்படாதே. சிந்தித்துப் பார். மனிதா!

உயிரகன்ற பின் உன் உடலால் யாருக்குப்

பலனடா? நாயின் தோலால் நகை துடைக்கலாம். பாயும் புலித் தோலும் யோகியர்க்குதவும், பறவை யின் மென் சிறகால் படுக்கையாக்கி இளைப் பாறலாம். ஆனால், அசட்டு மனிதா உயிர்போன பின் உனது மேனியின் ஒரு சிறுபாகத்தையாவது, என்றாவது, எதற்காவது உபயோகிக்க முடியு மாடா? உன் மூளையில் பணப் பித்தம் மண்டி விட்டது கொஞ்சம் துங்கு. பிறகு தெளிவும்.

ஆம். தூங்கா விட்டால் குழப்பம் அதிகமாகும். பொன்மேனிராயா ஆகா! ஓயாத தங்கத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/88&oldid=537650" இலிருந்து மீள்விக்கப்பட்டது