பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



42

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை


கழகம் 1985இல், வெளியிட்ட ‘மணிமேகலை' உரைநூலுக்கு முதல் 26 காதைகளுக்கு ந.மு.வே. நாட்டார் உரை எழுதியுள்ளார் அவரது உடல்நிலை காரணமாக அதற்குமேல் எழுத இயலவில்லை எனவே, எஞ்சிய 4 காதைகளுக்கு உரைஎழுதும் பணி உரைவேந்தருக்குத் தரப்பட்டது. இந்நான்கு காதைகளுமே, பெளத்த சமயக் கருத்துக்களையும், பிறசமய வாதங்களையும் விரித்துரைக்கும் சிக்கலானவை என்பர் அறிஞர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த போது, உரைவேந்தர், இப்பகுதிகட்கு நாட்டார் கையாண்ட அதே முறையைப் பின்பற்றி எழுதினார். 'காதை'யின் தொடக்கத்தில் அதன் சுருக்கம்; பின்பு, பகுதி பகுதியாக உரை என அமைந்துள்ளது. 'சமயக் கணக்கர் தந்திறம் கேட்ட காதை'யில், அளவை வாதம், நிகண்ட வாதம், சாங்கிய வாதம், வைசேடிகவாதம், பூதவாதம் விளக்கப்படுவது கொண்டு உரைவேந்தரின் கடின உழைப்பைப் புரிந்து கொள்ளலாம்.

இதற்குமுன்பே, 'மணிமேகலைச் சுருக்கம்' 1943ஆம் ஆண்டிலேயே, அதாவது, உரைவேந்தர், திருப்பதியில் பணிபுரிந்த காலத்திலேயே வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘மணிமேகலை’க் காப்பியத்தின் சிறப்புக் குறித்து உரைவேந்தர் கூறுவது, மனங்கொளத்தகும்:

"பண்டை நாளில் விளங்கியிருந்த நூலாசிரியர், உரையாசிரியர் பலரும் பெரிதும் ஈடுபட்ட தமிழருமை வாய்ந்தது இந்த அரிய காப்பிய நூல் கற்பனைக் களஞ்சியமாக விளங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள், தாம் அருளிய 'திருவெங்கைக் கோவை'யில், கொந்தார் குழல் மணிமேகலை நூல் நுட்பம் கொள்வதெங்ங்ன்?" என்றும்; அம்பிகாபதி என்பவரால், 'அம்பிகாபதிக் கோவை'க்கண், 'மாதவிபெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே' என்றும், தொனிநயம்படப் போற்றி உரைத்த அருமையுடையது; அழகிய செம்பாகமான நடையழகு வாய்ந்தது; ஏனைச் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் என்ற இரண்டினும் எளிய நடை பொருந்தியது; ஆங்காங்குச் சிதறித் தோன்றும் வளையாபதி, குண்டலகேசி என்ற காப்பியச் செய்யுட்களை நோக்க அவற்றினும் நடையழகு சிறந்திருப்பது. காவிரிப்பூம்பட்டினம், வஞ்சி, காஞ்சி முதலிய பெருநகரங்களின் பண்டைச் சிறப்பை எடுத்துக் காட்டுவது இயற்கை அழகை இனிது காட்டி மகிழ்வுறுத்துவது; புத்த தருமங்களையும் பண்டைநாளில் தமிழகத்தில் நிலவிய பல சமயக் கருத்துக்களையும் விளங்க அறிவிப்பது; நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக, கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த