பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.47
நூலாசிரியர்

இலக்கணங்களும் அருட் குணங்களும் பிறவும் திராவிட வேதத்தின்கண்(தேவாரத் திருமுறையில்) கூறப்பட்டிருத்தலான் அவற்றை ஓதல்,கேட்டல்களைச் செய்த துணையானே மக்கட்குக் கழிபெருங் காதல் மீதுாரு மென்று உணர்க!”

இவ்வாறு இன்னும் பல பொருள் நயங்களை எடுத்துரைக்கின்றார் உரைவேந்தர்!

இத்தேவாரப் பதிகப் பாடலுக்கு 33 பக்க அளவில் உரைவிளக்கம் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்

சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் பழைமையானது 'ஞானாமிர்தம்' என்ற நூல். மெய்கண்டார் அருளிய சிவஞானபோதத்திற்கும் காலத்தால் முந்தியது. இது பழமையானது என்பதன்றி, நடையிலும் சற்றுக் கடின முடையது. இரும்புக் கடலை என்று எண்ணி, ஒதுங்கியவர்களும் உண்டு.

வாகீச முனிவர் என்பார் எழுதிய இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அதனை ஏறத்தாழ 70 ஆண்டுகட்குமுன், மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ளது. இதனை ஆராய்ந்து வெளியிடும் பணியைச் செய்தவர் சேற்றூர் சுப்பிரமணிய கவிராயர் ஆவார். அவர் தமக்குக் கிடைத்த சில ஏடுகளைக் கொண்டு, அரும்பாடு பட்டு, அந்நாளில் எழுதியது, மிகவும் பெருமைக்குரிய தொண்டாகும். சங்கநூல் வெளியீடுகளும், கல்வெட்டிலாகா வெளியீடுகளும் போதிய அளவு வெளிவராத காலம். அத்தகு நிலையிலும் கடும் உழைப்பால் இந்நூல் பதிப்பைச் செய்துமுடித்த சிறப்பு கவிராயருக்கே உண்டு என உரைவேந்தரே புகழ்ந்து போற்றுகின்றார்!

'ஞானாமிர்தத்' திற்குப் பின்னர்த் தோன்றிய சைவசித்தாந்த நூல்களின் உரைகளில் இவ் ஞானாமிர்தப் பகுதிகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. 'சிவப்பிரகாசம்' என்பது சைவ சித்தாந்த நூல்; அதனைக் குறித்த மற்றொன்று, 'சிவப்பிரகாசப் பெருந்திரட்டு'. இத் தொகைநூலில் ஞானாமிர்தத் திருவகவல்கள் பல கோத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறே, 'முத்து முடிவு' என்ற பழைய நூல் ஒன்றிலும் ஞானாமிர்தப்பகுதிகள் சில இடம் பெற்றுள்ளன. இவற்றால்