பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


இன்புறலாம். இலக்கியங்களும், சிறப்பாகக் கம்ப ராமாயணப் பகுதிகள் பற்றிக் கற்றோர் இதயம் களிக்குமாறு உரையாற்றுவதால் பிள்ளையவர் களுக்கு (உரைவேந்தர்) இணை, பிள்ளையவர்களே! பேச எடுத்துக் கொண்ட பகுதியை நாடகக் காட்சி யாக அமைத்து, அதற்குரிய பாத்திரங்களை அவை யோர் மன அரங்கிலே மாறி மாறி வந்து நடிக்கச் செய்து அவர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தும் அற்புத ஆற்றலைப் பிள்ளை யவர்கள்பாலன்றிப் பிறரிடம் காண்பதரிது!”

உரைவேந்தர், தாம் பேசுதற்கு முன், வீட்டிலேயே சில குறிப்புக்களைத் தயாரித்துக் கொள்வார். அக்குறிப்புக்களை அப்படியே மனத்தில் பதிய வைத்துக்கொண்டு பேசுவாரேயன்றி, அவற்றைப் பேசும் இடத்திற்குக் கொண்டு வரமாட்டார்! அத்துணை நினைவாற்றல் கொண்டவர்!

“நமது புலவர் பெருமான் (உரைவேந்தர்) நாவீறு கெழும அஞ்சொல் உரையாற்றும் பேருரை யாளருமாவர்! சிறந்த பேச்சாளர்கள் (தொடர்பன் எழுதியது) என்னும் நூலில், இவர் உரைத்திறன் பாராட்டப்பெறுவதைக் கருத வேண்டும். இவர், சொற்றொடர் எவ் வினைமுற்றால் முடிகிறதோ, அதனையே எச்சமாக்கி, அடுத்த சொற்றொடரைத் தொடங்கும் அந்தாதித் தொடை மரபினை அழகொழுக ஆள்வர்; ‘எனவே’ என்ற சொல்லைப் பெய்து, தம் கருத்துக்களைத் தீர்ப்பாக உரைப்பார். இன்னிசை விருந்தென்ன இடிப்பண்ணும் இழைய உரைவேந்தர் பேசும் அழகே அழகு!”

எனப் புலவர் தி.நா. அறிவொளி கூறுவார்!

‘பேசுவது ஒன்று; எழுதுவது ஒன்று’ என்றில்லாமல் பேசுவது போன்றே எழுதுவார்; எழுதுவது போன்றே பேசுவார். கொச்சைத் தமிழை இச்சையோடு பேசுவதென்பது, இவர்பால் என்றும் காணமுடியாத ஒன்று. தூய, இனிய, செந்தமிழ் நடையில் பேசுவதும் எழுதுவதும் இவருக்குக் கைவந்த கலை! பேச்சின் முடிவில், அனைத்தையும் தொகுத்துக் கூறி