பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது (டாக்டர் பட்டாபி எழுதிய காங்கிரஸ் மகா சபையின் சரித்திரம் (தமிழ் மொழி பெயர்ப்பு) - பாகம் 1, பக்.6.) இந்த வேண்டுகோளுக்குப் பின், பட்டதாரிகளான இந்தியர்களிடையே ஒரு விழிப்பு தோன்றியது. ஹ்யூம் துரைமகனார் ஆங்கிலம் படித்த இந்தியர் களைக் கொண்ட ஓர் அமைப்பைத் தோற்றுவிக்க நினைத்தது சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள கோடிக் கணக்கான மக்கள் மீது ஆங்கிலம் படித்த புதிய வகுப் பினருக்குச் செல்வாக்குத் தேடித்தரும் நோக்கத் துடனாகும். 'காங்கிரசின் தந்தை ஹ்யூம்' சிப்பாய்ப் புரட்சியானது இந்து குருமார்களாலும் இஸ்லாமிய மௌல்விகளாலும் தூண்டிவிடப் பட்டதென்று வரலாறு கூறுகிறது. சிப்பாய்ப் புரட்சி பற்றித் தாம் நடத்திய ஆய்வினாலும் இந்த உண்மையை ஹ்யூம் அறிந்திருக்க வேண்டும். அதனாற்றான். இந்திய சமுதாயத்தின் மீது மதவாதிகளுக்கிருந்த செல்வாக்கைக் குறைக்கவும், ஆங்கிலம் படித்தவர்களுடைய செல் வாக்கை வளர்க்கவும் இந்திய தேசியக் காங்கிரசை ஹ்யூம் துரைமகனார் தோற்றுவித்தார் என்ற கருத்தும் இந்திய வரலாற்றில் கலந்திருக்கிறது. ஹ்யூம் அவர்கள் இந்திய தேசிய காங்கிசைத் தொடங்கி வைத்தது பற்றிக் காந்தியடிகள் லண்டனில் 5.9.1931-ல் நடந்த வட்டமேஜை மாநாட்டு சமஷ்டி