பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 - இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்ட சென்னை ராஜ்யத்தவர் 21 பேரிலே தமிழர்களான திரு. சுப்பிரமணிய ஐயர் ("இந்து" - "சுதேச மித்திரன்" நாளிதழ்களைத் தோற்றுவித்தவர்). திரு. குந்தி கேசவப் பிள்ளை (பிற்காலத்தில் சென்னை ராஜ்ய சட்டசபையில் துணைத் தலைவராக இருந்தவர்), திரு. எஸ். சுப்பிரமணிய ஐயர் (பிற்காலத்தில் சென்னை ராஜ்ய உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பதவி வகித்தவர்), திரு. வீரராகவாச்சாரியார் ('இந்து' நிர்வாகி), திரு. சுவாமிநாத ஐயர் (தஞ்சாவூர்) ஆகியோர் முக்கியமானவர்களாவர். முதல் காங்கிரசிலே முதல் தீர்மானத்தை முன்மொழிந்த பெருமை திரு. ஜி. சுப்பிரமணிய ஐயருடையதாகும். அத்தீர்மானத்திலே, "இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள அதிகார வர்க்கத்தினரால் இந்தியப் பெருநாடு நிர்வகிக்கப்படும் விதம் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை தர இந்தியரும் அடங்கிய ராயல் கமிஷன் ஒன்றை நியமிக்க வேண்டும், என்னும் கோரிக்கை வெளியிடப்பட்டது. முதல் காங்கிரசிலே மொத்தம் ஒன்பது தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இப்படி, இந்திய தேசியக் காங்கிரஸ் தோன்றிச் சரியாக ஒரு நூற்றாண்டு ஆகிறது. வாழ்க, இந்திய தேசிய காங்கிரஸ்!