பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் மிகுதியாக இருந்தனர். அப்படியிருந்தும், கல்வித் தகுதியும் நிர்வாகத் திறமையும் தேசபக்தியும் உடைய எல்லா மதத்தவருமே மகாசபைக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1907-ல் சூரத்தில் நடைபெற வேண்டிய மகாசபை ஒன்றுதான் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் ஏற்பட்ட கொள்கை ரீதியான மோதலால் தடைப்பட்டு விட்டது. 1885 தொடங்கி 1920 வரையுள்ள 35 ஆண்டுகளிலும் ஆண்டுதோறும் காங்கிரஸ் மகாசபை நடந்து வந்தது. 1918லும் 1920 லும் வருடாந்திர மகாசபை கூடு முன்னர் விசேஷ மகாசபையும் நடைபெற்றது. ஒரு கனவானே ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பத்திலே தலைமைப் பதவி பெற்றதுமுண்டு. பொதுவாக, இரண்டு விசேஷ மகாசபைகளிலும் 35 வருடாந்திர மகாசபைகளிலும் பதவி பெற்றவர்களை மதவாரி பிரித்துப் பார்ப்பது இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபையின் தேசியத்தை அறிந்து கொள்ளத் துணை புரியும் அல்லவா! இதோ, அந்தப் பட்டியல். கிறித்துவர்கள் (1) உமேஷ்சந்திர பானர்ஜி, '(2) 'ஆல் ஃபிரெட்வெப், (3) ஹென்றி காட்டன், (4) வில்லியம் வெட்டர்பர்ன், (5) ராம்சே மெக்டோனால்டு. இவர்களிலே கடைசி நால்வரும் பிரிட்டனைச் சேர்ந்த ஐரோப்பியக் கிறித்துவராவர். இவர்களேயன்றி,