பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் ஏற்படுத்தினார். இதனால், காங்கிரஸ் வளரவும் வலுப்பெறவும் வாய்ப்பு ஏற்பட்டது. வெள்ளையரை மணந்த தமிழ்ப் பெண் இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவின் ஒரு பகுதியான சென்னையம்பதியிலே குடியேறி இந்தியக் குடிமகனாகவே தம்மை மாற்றிக் கொண்ட ஒரு ஆங்கிலேயரின் மகனான எர்ட்லி நார்ட்டன் என்னும் புகழ்மிக்க வழக்கறிஞர் காந்தி சகாப்தத்திற்கு முன்பு காங்கிரசிலே மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதல்வர் பொறுப்பிலிருந்த திரு. ஆதம் என்னும் வெள்ளையரும் ஆண்டுதோறும் காங்கிரஸ் மகாசபையிலே சென்னை ராஜ்யத்தின் பிரதிநிதியாகச் சென்று பங்குபெற்று வந்தார். அடையாறு பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி. எஸ். அருண்டேல் என்னும் ஐரிஷ் வெள்ளையரும், காங்கிரஸ் மகாசபையில் மதிப்பிற்குரிய இடத்தைப் பெற்றிருந்தார். சென்னை ராஜ்யத்திலே அப்போது வானோங்கி வளர்ந்திருந்த தொழிற்சங்க இயக்கத்திலும் முன்னணி யில் இருந்தார். தமிழகத்துப் பிராமணப் பெண்மணியான திருமதி. ருக்மணி அம்மாளை மணந்து கொண்டு தமிழகத்தின் மாப்பிள்ளையாகவே மாறிவிட்டார். வங்க மாநிலப்

  • இ.தே.நூ-3)