பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது "இந்தியர்களை அறிவாளிகள் ஆக்குவதோ, அவர்களிலிருந்து வருங்காலத் தலைவர்களைத் தயாரித்து அளிப்பதோ பிரிட்டிஷ் ஆட்சியின் நோக்கமல்ல; அது எங்களால் இயலாத காரியமும் கூட. அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்குத் தேவைப்படும் சிப்பந்தி வர்க்கத்தைத் தயாரிக்கு மளவுக்கு இந்தியருக்குக் கல்வி தருவதுதான் எங்களால் சாத்தியமாகும்." என்று ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகக் கூறினார். இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது வருடாந்திர மகாசபையிலிருந்து. அம் மகாசபையின் பந்தலிலேயே இந்தியக் கல்வி மாநாடு" என்ற பெயரிலே, காங்கிரசைச் சேர்ந்த தேசியத் தலைவர் களிலே சிலர் தனியாக சில ஆண்டுகள்வரை மாநாடுகள் நடத்தி வந்தனர். அதிலே 5, முதல் 14 வயதுவரையுள்ள குழந்தைகளுக்குக் கட்டாயமாகவும் இலவசமாகவும் கல்வி தரவேண்டுமென்றும், அந்தக் கல்வியையும் தாய்மொழியின் மூலமே அளிக்க வேண்டுமென்றும் அரசாங்கத்தை வற்புறுத்தும் தீர்மானங்களை நிறை வேற்றி வந்தனர். பகிஷ்காரம்! காந்தி சகாப்தத்திற்கு முன்பே இந்திய தேசிய காங்கிரசானது, சமுதாயச் சீர்திருத்தத்திலே அக்கறை காட்டி, அதற்கெனத் தனியாக வேலைத் திட்டம் ஒன்றையும் வகுத்துக் கொண்டது. சமுதாயச் சீர்திருத்தம்