பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் 51 "வீஸ்வ ரூபம்!" வருடாந்திர மகாசபை கூடிய போதெல்லாம், அதிலே கலந்து கொண்ட பிரதிநிதிகள், ஒரே பந்தியில் அமர்ந்து விருந்து அருந்தினர். ஆம்; ஆண்டுதோறும் சமபந்தி விருந்து' நடைபெற்றது காங்கிரஸ் பந்தலிலே! சாதியாலும் வருணத்தாலும் மதத்தாலும் மொழி யாலும் வேறுபட்டவர்கள் எல்லாம் எத்தகைய ஏற்றத்தாழ்வுமின்றி ஒரே பந்தியில் அமர்ந்து உண வருந்தினர், இந்தப் புதுமை அல்லது புரட்சி தொடங்கியது காங்கிரசிலேதான். இதற்கு முன்பு “மகாசபை" அல்லது மகாநாடு" என்னும் பெயரில் நாடு தழுவிய முறையில் பலர் கூடியிருப்பார்களானால், அது ஒரு மதம் சம்பந்தப்பட்ட தாகத்தான் இருக்கும், இல்லையேல், ஒரு வருணம் அல்லது ஒரு சாதி சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும். காங்கிரஸ் மகாசபைகளிலோ, இந்தியர் என்னும் பெயரால் பிரதிநிதிகள் ஒருங்கு கூடியதால் தேசியம் "விஸ்வரூபம்" எடுத்துக் காட்சியளித்தது. காந்தி சகாப்தத்திலே, மாநில காங்கிரஸ் கமிட்டிகள் மொழி அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்டன வாதலால், மாநிலந்தோறும் - ஏன், மாவட்டந்தோறும் அரசியல் மாநாடு" என்னும் பெயரால் காங்கிரஸ் பேரவைகள் ஆண்டுதோறும் நடைபெறலாயின.