பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது தெற்கிலுள்ளோர் கங்கையாட வடக்கு நோக்கித் தீர்த்த யாத்திரை சென்றனர். மற்றும், தெற்கிலுள்ளோர் வடக்கிலுள்ள காசி கோயிலுக்குச் சென்றனர். வடக்கி லுள்ளோர், தெற்கிலுள்ள இராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். இது, தல யாத்திரை எனப்பட்டது. சாமான்யர்களேயன்றி, ஆதிசங்கரர் - இராமானுஜர் - மாத்வர் போன்ற சமயத் தலைவர்கள் தாங்கள் கடைப்பிடித்த சமய தத்துவங்களை மக்களிடையில் பரப்ப விரும்பியும் குமரி முதல் காஷ்மீரம் வரை யாத்திரை செய்தனர். அரசியல் யாத்திரை! தேசிய காங்கிரஸ் தோன்றிய பின்னர், இந்த சமய வழிப்பட்ட யாத்திரைகளை இரண்டாந்தரமாக்கும் வகையிலே, அரசியல் யாத்திரையைத் தொடங்கி வைத்தனர் தேசியத் தலைவர்கள். இன்றுள்ளது போல் நவீன போக்குவரத்துச் சாதனங்கள் மலிந்திராத அந்தக் காலத்திலே, தேசத் தலைவர்கள் நாடு முற்றிலும் சுற்றுலாச் செய்வதில் அதிக கஷ்டமிருந்தது. கடந்த நூற்றாண்டின் இறுதியில் நடந்த வருடாந்திர காங்கிரஸ் மகா சபைக்குச் சென்னையிலுள்ள வர்கள் கல்கத்தா செல்லவும், கல்கத்தாவிலுள்ளவர்கள் சென்னைக்கு வரவும் பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியின் கப்பலிலேயே பயணம் செய்ய வேண்டியிருந்தது.