பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் 63 இந்தியா முழுவதிலும் சுற்றுலாச் செய்து பொது மக்களுக்கு அரசியல் விழிப்பூட்டவும், சாதி சமய வருண வேறுபாடுகளைக் கடந்து தேசபக்தியையும் தேசிய ஒருமைப்பாட்டுணர்ச்சியையும் வளர்க்கவும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அனைத்திந்தியத் தலைவர்களைப் பின்பற்றி மாநில மட்டத்திலும் மக்களிடையில் செல்வாக்குப் பெற்றிருந்த தேசியவாதிகளும் தங்கள் தங்கள் மாநில - மாவட்ட எல்லைகளுக்குள் சுற்றுலாச் செய்து அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர், பாலரின் புரட்சி! இப்படி, சமயத் தலைவர்களின் தல யாத்திரை - தீர்த்த யாத்திரை போலத் தேச விடுதலை யாத்திரையை மேற்கொண்ட தேசியத் தலைவர்களிலே லோகமான்ய திலகர், லாலா லஜபதி, கோபாலகிருஷ்ண கோகலே, விபினசந்திரபாலர், அன்னிபெசன்ட், சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோர் முக்கியமானவர்களாவர். 1907-ல் விபினசந்திர பாலர் தெற்கே வந்து செய்த அரசியல் பிரச்சாரமானது ஆட்சியை அதிர்ச்சியடையச் செய்தது. இராமகிருஷ்ணர் மடத்துத் துறவியான சுவாமி விவேகானந்தர், "வேதாந்தப் பிரச்சாரம் என்னும் குறிக்கோளுடன் தேசச் சுற்றுலாவை மேற்கொண்டு, தேசியப் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். சென்னை ராஜ்யத்தில் அரசியல் விடுதலை ஆவேசத்தை ஏற்படுத்தியவர்களிலே சுவாமி