பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் கொண்டு சிந்திப்பார்களானால், அவர்கள் அந்நாளில் கிராமந்தோறும் யாத்திரை செய்தது அவர்களுடைய அகக் கண்களுக்குக் காட்சியளிக்கும். அவர்கள் நடத்தியது தல யாத்திரையோ தீர்த்த யாத்திரையோ அல்ல; அவற்றை விடவும் புனிதமான அரசியல் யாத்திரை! எழுதப் படிக்கத் தெரியாத கிராம மக்களிடையே கூட்டம் போட்டு, அவர்களுக்கு நாட்டின் அரசியல் பொருளாதார நிலைகளை எடுத்துச் சொல்லும் ஆசான்களாக அந்நாளில் தேசியவாதிகள் பணி புரிந்தனர். இதற்குச் 'சமுதாயப் புரட்சி' என்றல்லாமல், வேறு என்ன பெயர் வைப்பது? சொர்க்கமல்ல, சுதந்திரம்! தேசிய காங்கிரஸ் தோன்றுவதற்கு முன்பு, கிராமங்களிலோ, நகரங்களிலோ மக்கள் நூற்றுக் கணக்கிலே கூடினார்கள் என்றால், சைவப் புராணிகரின் அல்லது வைணவ பாகவதரின் சொற்பொழிவைக் கேட்பதற்காகத்தான்! ஆயிரக்கணக்கில திரண்டிருந்தால், அது தேர் திருவிழாவுக்குத்தான்! ஆனால், தேசிய காங்கிரஸ் தோன்றிய பின்னர், தேசிய அரசியல் வாதிகளின் அறிவார்ந்த பேச்சுக்களைக் கேட்கவும் மக்கள் கூடினர். பௌராணிகரோ பாகவதரோ பேசுகிறார்களென் றால், அது சொர்க்கத்தில் இடம் பிடிக்க மக்களுக்கு ஆசையூட்டுவதாகத்தான் இருக்கும். ஆனால், தேசிய இ.தே.நூ-5