பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே - அதாவது, 1908-ல் ஆறாண்டு சிறைத் தண்டனை! ஆம்; அரச நிந்தனை பாணியில் தமது 'கேசரி' - 'மராட்டா' வார இதழ்களில் எழுதியதற்காக! பொதுமக்களின் சிந்தனையிலே தேச விடுதலைப் பிரசாரமானது புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்து கிறது; அவர்களுடைய சிந்தனையிலே மறுமலர்ச்சியைத் தருகிறது; மூடநம்பிக்கைகளிலிருந்து அவர்களை விடுவித்து யதார்த்தமான அரசியல் பொருளாதாரச் சிந்தனைகளை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது - என்னும் உண்மைகளை அரசியலுக்குப் புறம்பான சமய - சமூக சீர்திருத்தவாதிகள் உணரவில்லையென்றாலும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உணர்ந்தது. அதனாற்றான், தேசியப் பிரச்சாரகர்களை மக்களிடமிருந்து பிரித்துச் சிறையிலடைத்து வைக்க முயன்றது. திலகர் சகாப்தத்தை விடவும் காந்தி சகாப்தத்திலேதான் அரசியல் பிரச்சாரகர்கள் சொல்லொணா இன்னலுற்றனர். பொது மக்களைப் பழைய மூட நம்பிக்கைகளி லிருந்து விடுவித்து அவர்களுக்கு அரசியல் - பொருளாதார உண்மைகளை உணர்த்தும் பொருட்டு, தேசியவாதிகள் நாளிதழ்களையும் வார மாத இதழ் களையும் நடத்தினர். எண்ணற்ற பிரசுரங்களை எழுதி வெளியிட்டு, அவற்றை மக்களிடையே பரப்பினர். அந்தப் பிரசுரங்களுக்கு எல்லாம் சட்ட விரோத மானவை" எனப் பெயர் கொடுத்து, அவற்றை யெல்லாம் பறிமுதல் செய்தது பிரிட்டிஷ் அரசு. பல பத்திரிகை