உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



தனிமனிதன் பலத்திற்கே முக்கியத்துவம் என்ற கொள்கை பழங்காலத்திலேயே உருவாகி விட்டது என்பதையே நம்மால் உணரமுடிகிறது.

அதைத் தொடர்ந்து, விஜய நகர சாம்ராஜ்யத்திலும், இதுபோன்ற முறை அமைந்திருந்தது. கிருஷ்ணதேவராயர் எனும் பேரரசர், தினந்தோறும் மல்யுத்தப் பயிற்சிக்கான அத்தனை கடுமையான பயிற்சிகளையும் செய்ததாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

முகமதியர்காலம்

முகமதிய பரம்பரை ஆட்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்த பாபர், சிறந்த உடற்பயிற்சியாளராகத் திகழ்ந்திருக்கிறார். நீச்சலில் அவர் சிறந்த ஆற்றல் பெற்றவர் கங்கையில் எதிர்நீச்சல் அடிப்பது அவரது அன்றாடப் பொழுதுபோக்கு.

அக்பர் குதிரைப் பந்தாட்டம் (Polo) ஆடுவதில் வல்லவர். முகமதியர் காலத்தில், உடலை வலிமையுடன் வைத்துக் காப்பாற்றுவதில் மன்னர்களும் மக்களும் மிக மிக ஆர்வமுடன் விளங்கியிருக்கின்றனர்.

தனிமனிதன் பலம், துவந்த யுத்தம் இவற்றிற்கே சிறப்பிடம் அளிக்கப்பட்டதால், மக்கள் தங்கள் பலத்தையே நம்ப வேண்டியிருந்தது. ஆகவே, தனிப்பட்ட முறையில் உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கினர். மல்யுத்தமும், குத்துச் சண்டையும், கத்திச் சண்டையும், இவற்றில் தேர்ச்சி பெற்றவர்களே மரியாதைக்குரியவர்களாக இருந்தார்கள்.

மராத்தியர் காலம்

வீர சிவாஜி காலம் என்றுகூட இதைக் கூறலாம். உடலியக்கமுறையில் எழுச்சி நிறைந்த காலம், சிவாஜிக்கு வீர