இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்
15
எழுச்சியை உண்டுபண்ணியவர்களில் ஒருவர் ராமதாஸ் சுவாமி அவர்கள். அவர் பலத்திற்கும் வீரத்திற்கும் உருவமாக அமைந்த அனுமனுக்காக 1200 கோயில்களைக் கட்டினார்.
ஒவ்வொரு பயிற்சி அரங்குகளிலும் (Gymnasium) அனுமான் சிலை வைக்கப்பட்டு, வணங்கப்பட்டது. அங்கே தான் நமஸ்கார உடற்பயிற்சிகள் பிரபலப்படுத்தப்பட்டன. ராமதாஸ் சுவாமிகள் இந்தியாவெங்கும் சுற்றுப் பயணம் செய்தபோது. அனுமன் கோயிலைக் கட்டுவித்தும், பயிற்சிக் கூடங்களை நிறுவியும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளித்தார். அவரே ஒருநாளைக்கு 1200 நமஸ்கார் பயிற்சிகள் செய்வாராம். -
சூரிய நமஸ்காரம் என்பது தான் நமஸ் காரப் பயிற்சியாகும். அது மதக் கோட்பாட்டில் அமைந்தது. அவ்வாறு செய்வது உடலை வலுவாக்குகிறது. நீண்ட ஆயுளைத் தருகிறது என்பதை அவர் உணர்ந்ததால், மகராஷ்டிரம் முழுவதும் இதைச் செய்ய ராமதாஸ் சுவாமிகள் ஏற்பாடு செய்தார்.
பயிற்சிக் கூடங்களில், தண்டால், பஸ்கிகள் முதலியன இடம் பெறலாயிற்று. அத்துடன். கரளாகட்டை சுற்றுதல் மல்லர் கம்பப் பயிற்சிகள், கல் தூக்குதல், முதலியவையும் இடம்பெற்றன. இவையே, 'இந்திய உடற்பயிற்சித்துறையை புகழ் பெறத்தக்க அளவில் வளர்த்திடும். முன்னோடியாகத் திகழ்ந்தன.
பிரெளட்டன் என்பவர் எழுதுகிறார்.
'இந்திய சிப்பாய்கள் பயிற்சிகள் செய்வதில் விருப்பமுள்ளவர்களாக இருந்தார்கள். அந்தப் பயிற்சிகள் அவர்களுக்கு, ஆனந்தத்தை அளித்தன. அவர்கள்