இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
உலகப் புகழ் பெற்ற இந்திய மல்யுத்த வீரர்களுக்கு மட்டுமல்ல, அந்நிய ஆட்சியை எதிர்த்த தலைவர்களுக்கு கூட, மன வல்லமையும், உடல் வல்லமையும் அளித்த பயிற்சிகளாக விளங்கி இருக்கின்றன.
அத்தகைய அருமையான தண்டால் பஸ்கிப் பயிற்சிகளை ஆர்வத்துடன் செய்து, அளவிலா ஆற்றலைப் பெற்று ஆனந்த மயமான வாழ்வுப் பெற்று, நீங்கள் சிறந்திட விரும்புகிறோம். வேண்டுகிறோம். -
உடல் நலம் போன்ற செல்வம் உலகில் ஏது? சிறந்த செல்வந்தர்களாகச் சிறக்க வாழ்த்துகிறோம்!