உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

29


குறிப்பு: படத்தில் காட்டியிருப்பது தொடக்க நிலையாளர் செய்வதுபோல் இருக்கிறது. நல்ல பயிற்சி வந்து விட்டால் கைகளை உடலோடு சேர்த்து வைத்து, இன்னும் கிழே குனிந்து செய்வதுபோல அமைந்து விடும். ஆகவே இந்தப் படத்தை ஒரு குறிப்புக்காகப் பார்த்துப் பழகிக் கொள்ளவும்.

இந்தத் தண்டாலையே மறுபுறம் (Reverse) அதாவது வலது காலை நீட்டி இடதுகை கொண்டு தொடுவதுபோல் செய்யவும்.

4. ஒற்றைக்கால் தண்டால்
(Alternate Leg Dand)

பெயர் விளக்கம்

நேர்த் தண்டால் செய்கிறபொழுது, இரண்டு கால்களையும் பின்புறம் நீட்டி பிறகு, தரைக்கு இணையாக உடலைக் கொண்டு செல்கிற முறையைப் பின் பற்றுகிறோம்.

இந்தத் தண்டால் முறையில், ஒரு காலை மடக்கிக் கொண்டு ஒரு காலை நீட்டிச் செய்வதாலும் பிறகு மறுகாலில் அதேபோல் செய்வதாலும் இதற்கு ஒற்றைக்கால் தண்டால் என்று கூறியிருக்கிறோம். இனி தண்டால் செய்கின்ற முறையினைக் காண்போம்.

செய்முறை

முதல் நிலை: நேர்த் தண்டால் செய்கின்ற இரண்டாம் நிலையான உள்ளங்கைகளிலும் முன்பாதங்களிலும் உடல் தாங்கப்படுகின்ற தன்மையில் முதலில் தொடக்க நிலை இருக்கவேண்டும்.