உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

47


பலத்தை மிகுதிப்படுத்தியும் விடுகின்றன. அதனால்தான் இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகளில், பஸ்கி ஓர் சிறந்த இடத்தைப் பெற்றிருக்கிறது.

இந்திய மல்யுத்த வீரர்களுடன் கலந்துறவாடி, கலந்துரையாடிய பிறகுதான், மேல்நாட்டு வீரர்கள், தண்டால், பஸ்கியின் சிறப்பினை அறிந்துகொள்ளலானார்கள். பல்கியின் அடிப்படை நுணுக்கங்களை ஆராய்ந்து. பின்னர் அதனை எடைப் பயிற்சியின்மூலம் மாற்றங்கள் செய்து, தங்கள் பயிற்சி முறைகளில் இணைத்துக்கொண்டு ஏற்றம்பெறத் தொடங்கி விட்டார்கள்.

பஸ்கிப் பயிற்சியில் முன் பாதங்களில் நின்றபடி பயிற்சி செய்வது, குதிகால்களில் நின்றும் முழு பாதங்களிலே இருந்தும் பயிற்சி செய்வது; தாண்டிக்குதித்து பயிற்சி செய்வது என்று பல முறைகளிருக்கின்றன.

ஆரம்ப காலத்தில், பஸ்கிப் பயிற்சியைத் தொடங்கித் தொடரும்பொழுது, கெண்டைக்கால் தசைகளும் தொடைத் தசைகளும் வலியெடுத்து கஷடப்படுத்தும். வலியைப் பொருட்படுத்தாது தொடர்ந்து செய்து வந்தால், வலி பறந்துபோய், வலிமைசேர்ந்துவிடும்.

அதிக எண்ணிக்கையில் பஸ்கிகளைத் தொடர்ந்து செய்தால், உடலில் உரமும் ஊக்கமும் (Vigour) சேரும். நிறைந்த நெஞ்சுரமும், விடா முயற்சியும் நிறையும் உடல் இயக்கத்தில் பொலிவும் தெளிவும், மனம்போல் அவயவங்கள் இயங்குகின்ற திறமும் தரமும் கூடிவரும்.

ஆகவே, பஸ்கிப் பயிற்சிகளை செய்பவர்கள், ஓரிரு அவயவங்களுக்கு மட்டுமே பயன்பெறுகின்றார்கள் என்கிற தவறான எண்ணத்தை அகற்றிவிட்டு, உடல் அவயவங்கள் முழுமைக்கும் செழுமைத் தரத்தக்க அளவில்தான் செயல்