உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



செய்முறை:

இவ்வாறு பிடித்து நின்று கொண்டிருக்கும் நிலையிலிருந்து, காலைத் தூக்கி இடப்புறமாகத் (கால்பாக அளவு (Quarter) திரும்பவும், இடுப்புக்கு மேல் உள்ள உடல் பகுதி நேராக, நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.

மீண்டும் முதலில் நின்ற தொடக்க நிலைக்கு வந்து, இப்பொழுது வலப்பக்கம் (கால்பாக அளவு) திரும்ப வேண்டும்.

இவ்வாறு மாற்றி மாற்றிப் பல முறை செய்ய வேண்டும்.

குறிப்பு: நாற்காலி பஸ்கி என்று கூறப்படுவதால், முழுங்கால்களை மடித்து நிற்கும் தன்மையானது, நாற்காலியில் அமர்ந்திருந்தால் உடல் அமைப்பு எப்படி இருக்குமோ, அந்த நிலையில் தோற்றமளிக்க வேண்டும்.

5. அனுமான் பஸ்கி (Hanuman Baithak)

தொடங்கும் நிலை:

கால்கள் இருக்கும் இடைவெளி தோள்களின் அளவு 10 அல்லது சுமார் 12 அங்குலம் இருப்பதுபோல வைத்து முதலில் நிற்கவும். பின்னர், முழங்கால்களை பாதியளவு மடக்கி, அரைக்குந்தல்போல (Half Squat) (முன் பயிற்சிக்குப் போலவே) நின்று, இரு கைகளையும் முழங்கால்களின் மேல் வைத்துக் கொண்டுவிடவும்.