பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள் 63

சாகசச் செயல்கள் (Stunts)

ஸ்டண்ட் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், சினிமாவில் நடைபெறுகின்ற சண்டைக் காட்சிதான் நம் நினைவுக்கு உடனே வருகிறது. என்ன காரணத்திற்காக "ஸ்டண்ட் என்ற சொல் தோன்றியதோ, அந்த உரிய பொருள் காலப் போக்கில் மறைந்து போய், புதிய ஒரு செயலுக்கு உரிய சொல்லாகப் பிறப்பெடுத்து பெருமை படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆரம்ப காலத்தில் 'ஸ்டண்ட்" என்ற ஆங்கிலச் சொல்லுக்குரிய அர்த்தமாவது, வளராமல் தடைசெய் என்பது ஒன்று. ஒரு பொருள், காரியத்தை வளர விடாமல், வளர்ச்சியடையவிடாமல் தடைசெய் என்பது.

அடுத்து, பகட்டு விளம்பரம் என்பது ஒரு பொருளாகும். எப்படியாவது ஒரு அசைவு செய்கை, அல்லது இயக்கம் காட்டி, பார்க்கின்றவர்களை ஆச்சரியப்படுத்தியும் அதிர்ச்சிக் குள்ளாக்கியும், தனக்கென்று புகழையோ பெருமையையோ தேடிக் கொள்கின்ற பகட்டான விளம்பரத்தை ஸ்டண்ட் ான்று குறித்தனர்.

மற்றொரு அர்த்தமாவது. அதிர்ச்சி தரும் செயல் ாண்பதாகும். இத்தகையபொருள் பொதிந்த அர்த்தங்கள்தடம் மாறிப்போய், திசைமாறிச் சென்று, தற்போது, சினிமா சண்டைக் காட்சி ஒன்றையே நினைவுக்கு கொண்டு வருகின்ற அளவில் நிலைத்துப் போய் விட்டிருக்கிறது.

யாராவது ஒன்றை உறுதியாகச் சொல்லிவிட்டு. அந்த உறுதியில் இருந்து பிறழ்ந்து போனாலும், இவன் ஸ்டண்ட்” அடிக்கிறான். அதாவது 'சொன்ன வாக்குறுதியிலிருந்து பின்