பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

73



பிறகு, முழங்கால்கள் மீது கைகளை முன்புறமாகக் கொண்டு வந்து இருக்கமாகக் கட்டிக் கொள்ளவேண்டும்.

குதிகால் தரையில் படாமல், தரையில் பட்டுக் கொண்டிருக்கும் முன்பாதங்களால் மட்டுமே நடந்து செல்ல வேண்டும்.

குறிப்பு: முழங்கால்களைக் கட்டியிருக்கும் கைகளை எக்காரணம் கொண்டும் விட்டு விடக்கூடாது.

முன்புறம் நடந்து செல்வது போலவே, பின்புறமாகவும் நடந்து செல்லலாம்.

12. எடு சூரியன் (Rising Sun)

முழங்கால்களை முழுதும் மடக்கி, கால்களை சேர்த்திருக்கும் பொழுது (Full Knee Bend). முன்பாதங்கள் முன்புறம் பார்த்திருப்பது போன்ற அமைப்பில் உட்கார்ந்து கொள்ளவும்.

பிறகு கைகளின் உதவியில்லாமல் எழுந்திருக்கவும்.

குறிப்பு: முன்பாதங்களில் உள்ள கால் விரல்கள் சூரிய ஒளிக்கதிர்கள் போன்று நீண்டு காணப்படும் தன்மையாலும், மேலே எழுந்திருக்கும்போது, சூரியன் எழுவது போன்றும் கற்பனை செய்திடும் பயிற்சியாகக் கொள்க.

13.எடு பார்க்கலாம் (Back Breaker)

முடிந்தால், குதிகால்களின் மேல் உட்கார்ந்து கொள்ள லாம். இல்லையேல் சாப்பிடுவதற்கு சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்வது போல, கால்களை குறுக்காக மடித்தவாறும் உட்கார்ந்து கொள்ளலாம்.