20
இந்தி எதிர்ப்பு ஏன்?
கத்தாரை தலையெடுக்க விடாமல் தட்ட வேண்டுமானால் தமிழ்மொழியிலே இருக்கின்ற ஆர்வத்தைக் குலைக்கவேண்டும்: தமிழ்மொழிக்கு இருக்கின்ற இடத்தைப் பறிக்க வேண்டும்: தமிழ்மொழியினாலே சாதிக்க முடியாத காரியத்தை இந்தியினாலே சாதிக்க முடியும் என்று இளிச்சவாயர்களை நம்பவைக்கச் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அவர்கள் தலையைத் தடவலாம் என்ற சதித்திட்டம் தவிர, இதற்கென்ன காரணம் காட்டுகின்றார்கள்.
“நாட்டிலே இன்றையத்தினம் இந்தி 1960லே வருவதா? 70லே வருவதா என்பதா மிக அவசரமான பிரச்சினை? மூன்று வேளை சோறு போடுவதற்கு உன்னுடைய ஆட்சியிலே வக்கு இல்லை ஏறியிருக்கிற விலைவாசியை இறக்குவதற்கு உனக்குத் தெரியவில்லை; உன்னுடைய நாட்டிலே நிதியமைச்சர் கையிலே பிச்சைப் பாத்திரத்தைக் கொடுத்து, ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வொரு மாதம் துரத்துகிறாய் வெட்கமின்றி!
“காலம் சென்ற லியாகத் அலிகான் சொன்னார் – ‘எந்த நாடு கையிலே பிச்சைப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு கடனுக்காக வெளி நாட்டுக்குப் போகின்றதோ அந்த நாடு சுதந்திரமாக வாழமுடியாது’ என்று சொன்னார். உன்னுடைய நிதியமைச்சர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரை, (நான் நண்பர்கள் மூலமாகக் கேள்விப்படுகிறேன், அவருக்குச் சாதாரணமாக குடல் கோளாறு என்று – வயிற்றுக்கோளாறு என்று, அப்படிப்பட்டவரை) நீ பிச்சைப் பாத்திரத்தைக் கையிலே கொடுத்து அமெரிக்காவுக்கு அனுப்பியிருக்கிறாய். ஐந்தாண்டுத் திட்டம் நிறைவேறுமா – நிறைவேறாதா என்று ஆரூடம் பார்க்க வேண்டிய நிலைமை நாட்டிலே ஏற்பட்டிருக்கின்றது. இவ்வளவு அவசரமான காரியங்கள் இருக்கின்ற பொழுது, இவைகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், இந்தியைப் புகுத்த அவசர அவசரமாகத் துணிகின்ற காரியம் என்ன?
‘தமிழ் மொழி ஒன்று தான், தமிழ்த் தோழர்களும் – திராவிடத் தோழர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் –