உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

இந்தி எதிர்ப்பு ஏன்?


காலத்தையும் பாதிக்கத்தக்க அளவுக்கு அதிகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்? அவசரக்கோலத்திலே அள்ளித்தெளிக்கப் பட்டதிலேயும் ஒரே ஒரு ஓட்டுதானே வித்தியாசம். அந்த நேரத்திலே, இந்திமொழி திணிக்கப்படவேண்டும்; அதுதான் ‘தேசீயமொழி’ என்று போட்டார்களே, அதற்குப் பிறகு மக்களைப் பார்த்துக் கேட்டார்களா – ஒரு வார்த்தை கேட்டார்களா – இந்திமொழி இருக்கலாமா என்று கேட்டார்களா என்றால் இல்லை.

“இப்பொழுது தமிழர்கள் மைனர் திசையிலிருந்து நீங்கி மேஜரடைந்ததைப் போல, இன்றையத்தினம் ஓரளவுக்கு எழுச்சி பெற்றிருக்கிறார்கள்.

“இன்றையத் தினம் நான் சொல்வதை ஆணவம் என்று வடநாட்டுக்காரன் கருதிக்கொண்டாலும் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. எங்களுடைய உரிமை என்ன என்பது எங்களுக்குப் புரிந்துவிட்டது. அந்த உரிமையைப் பெறுவதற்கு எங்களுக்குப் போதுமான ஆற்றல் இல்லாவிட்டாலும் அந்த ஆற்றல் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆகவே, இந்தக் காலத்திலே நீ பழைய காலத்தில் மிரட்டியதைப்போல், இந்தியைப் புகுத்தி விடலாம் என்று கருதினால் அது பகற்கனவாக முடியுமே தவிர நிச்சயமாக அது நடைபெறாது.

“டாக்டர் சுப்பராயன் அவர்கள் இந்தித் திணிப்புக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தி பேசாத மக்களின் மனப்பான்மையை அறிந்துக்கொள்வதற்குத் துளியும் முயற்சிக்கவில்லை.

“வைதீகக் கல்யாணம்போல் அல்லவா அவர்கள் நடவடிக்கைகள் இருக்கின்றன? பெண்ணிடத்திலே ஒரு வார்த்தை கூடக் கேட்காமல், விடியற்காலையில் கணவனைக் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கும் நேரத்தில், அவன் ஒரு கால்