பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

'இந்தி' பொது மொழியா?


நாகரிக வாழ்க்கையில் வாழ்ந்த தமிழ் மக்களைப்போல், நாகரிகவாழ்வு வாயா தவர்களாகையாலும் ; சென்ற 400 அல்லது 500 ஆண்டுகளாகத் தோன்றிய வட நாட்டுப் புலவர்கள் பலரும், பண்டுதொட்டுத் தனித்த பேரறிவு வாய்ந்த தமிழ்ப் பெரும் புலவர் போலாது, சமஸ்கிருத புராணப் பொய்க்கதைகளை நம்பி அவற்றின் வழிச்சென்ற மயக்க வறிவினராகையாலும் ; உயிர்க்கொலை, ஊன் உணவு, கட்குடி, பல சிறுதெய்வ வணக்கம், பலசாதி வேற்றுமை முதலான பொல்லா ஒழுக்கங்களை அகத் தடக்கிய ஆரிய நூல்நெறிகளைத் தழுவிய வடவர், அவற்றை விலக்கி அருளொழுக்கத்தையும் ஒரே முழுமுதற் கடவுள் வணக்கத்தையும் வற்புறுத்தும் அருந்தமிழ் நூல் நெறிகளைத் தழுவாமையாலும்; அவருடைய மொழிகளை யும் அவற்றின்கட் புதிது தோன்றிய நூல்களையும் நந்தமிழ் மக்கள் பயிலுதலால், இவர்கள் ஏதொரு நலனும் எய்தார் என்பது திண்ணம். இனி, இந்திமொழிகள் நாலுகோடி மக்களாற் பேசப்படு தலாகிய தொகை மிகுதியை வற்புறுத்திக் காட்டுவார்க்கு, வங்காளமொழி ஐந்து கோடி மக்களாலுந், தமிழுந் தமிழோடினமான மொழிகளும் ஆறுகோடி மக்க ளாலும் பேசப்படும் பெருந்தொகை எடுத்துக்காட்டப் படும். இந்தியைப் பொதுமொழியாக்கல் வேண்டு மென்று ஒரு சாரார் கூறுவரேல், அதனினும் பெருந் தொகையினரான மக்களாற் பேசப்படும் 'வங்காள மொழி'யைப் பொதுமொழி யாக்கல் வேண்டுமென்று வங்காளரும், இவ்விந்திய நாட்டின் நால் எல்லைவரை யிலும் பரவியிருக்குந் திராவிட மக்கள் எல்லார்க்கும் முதன்மொழி யாவதும், இந்தியாவின் மட்டுமேயன்றி இலங்கை, பர்மா, மலாய் நாடு, தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளிற் குடியேறி வாணிக வாழ்க்கையிற் சிறந்தாராயிருக்குந் தமிழ்மக்கள் அனைவராலும் வழங்கப் படுவதும் ஆன தமிழையே பொதுமொழியாகப் பயிலல் வேண்டுமென நந்தமிழ் மக்களும் வலியுறுத்துவரல்லரோ?