பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தி' பொது மொழியா?

23


தமிழைப் பொதுமொழியாக்குதலின் நன்மை

இனி, இவ்விந்திய நாட்டுக்கு மிகப் பழைய மொழி களாய், அஃதாவது இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னேதொட்டுப் பயிலப்படுஞ் சிறந்த நாகரிக மொழி களாய்த் திகழ்வன தமிழுஞ் சமஸ்கிருதமும் என்னும் இரண்டேயாம். இவை யிரண்டனுட், சமஸ்கிருதம் பொதுமக்களாற் பேசப்படாமற் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இறந்து போயிற்று. மற்றுத் தமிழ்மொழியோ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தொட்டு இயல் இசை நாடக இலக்கணங்களும், மக்கள் வாழ்க்கையின் பல துறைகளிலும் அறிவை விளக்கி இன்பத்தை ஊட்டும் அரிய பெரிய பல இயற்றமிழ் இலக்கிய நூல்களும் ஆயிரக்கணக்காக உடைய தாய், இன்றுகாறும் பலகோடி மக்களாற் பேசவும் எழுதவும் பயிற்சி செய்யவும் படும் உயிருடை நன்மொழியாய் உலவி வருகின்றது. தமிழி லுள்ள பழைய நூல்களெல்லாம் அருளொழுக்கத்தையும் ஒரே முழுமுதற் கடவுள் வணக்கத்தையும் அறிவுறுத்தி, உயிர்க்கொலை ஊனுணவு கட்குடி பல சிறுதெய்வ வணக்கம், பலசாதி வேற்றுமை முதலான தீயவொழுக்கங் களைக் கடிந்து விளக்குகின்றன. இத்தீய வினைகளைச் செய்யுமாறு ஏவிப் பொய்யும் புளுகும் புகலும் ஆரிய நூல் களைப் போல்வன பழந்தமிழில் ஒன்று தானும் இல்லை; பிறந்து துன்புற்று இறந்தொழிந்த மக்களை யெல்லாங் கடவுளாக்கி, அவர் செய்யாதவற்றைச் செய்தனவாகப் புனைந்துகட்டிப் பொய்யாய் உரைக்கும் வடமொழிப் புராண கதைகளைப் போல்வன பழந்தமிழில் ஒன்று தானும் இல்லை. பழந் தமிழிலுள்ள நூல்களெல்லாம் உள்ள வற்றை உள்ளவாறே நுவல்வன ; மக்கள் தம் மனமொழி மெய்களால் நினைப்பனவுஞ் சொல்வனவுஞ் செய்வனவு மெல்லாந் தூயனவாய் இருக்க வேண்டுமென்று வற்புறுத் துவன ; மக்கள் வாழ்க்கையானது அன்பையும் அறத்தை யும் இரண்டு கண்களாகக் கொண்டு, ஒரு தெய்வ வழி பாடாகிய உயிருடன் கூடி உலவ வேண்டுமென உயர்த்துக்