பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தி' பொது மொழியா?

29


யுடைய தாயிருந்தது. அதன் அரசர்கள் 'கிருஷ்ண' ஆற்றங்கரையில் உள்ள 'தான்யகடகம்' அல்லது அமராவதி' என்னும் நகரில் நிலையாயிருந்து அரசுபுரிந் தார்களென்பதும், இவர்கள் பௌத்த சமயத்தைத் தழுவியவர்களென்பதும் ; இவர்களது அரசு கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் முடிவடைந்து போயிற்றென்பதும் இத்தேய வரலாற்று நூல்களால் அறியக்கிடக்கின்றன. அத்துணைச் சிறந்த அவ்வரசர்கள் அக்காலத்தே தெலுங்கு மொழியை வழங்கியிருந்தனராயின், அதன்கட் பல நூல்கள் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அத்தகைய பழைய நூல்கள் எவையுந் தெலுங்கு மொழியிற் காணப்படாமையால் அவ்வாந்திர அரசர் காலத்தே தெலுங்குமொழி வழங்கவில்லை யென்பதே தேற்றமாம். அப்பழைய காலத்தே அவர் வழங்கிய மொழி தமிழே என்பது பழைய தமிழ் நூல் ஆராய்ச்சியாற் புலனாகின்றது. ஆய் என்னுந் தமிழ் வள்ளல் வேளிர் குடிக் குரியனாதல் பற்றி வேள் ஆய் எனவும், அண்டிர நாட்டினனாதல் பற்றி வாய்வாள் அண்டிரன்' எனவும் புறநானூற்றுச் செய்யுட்கள் (133, 131) நுவல்கின்றன. - அண்டிரம்' என்னுஞ்சொல் 'ஆந்திரம்' எனத் திரிந்ததோ, அல்லது ஆந்திரமே அண்டிரம் எனத் திரிந்ததோ, இது தான் உண்மையென்பது இப்போது காட்டல் இயலவில்லை. அஃதெங்ஙனமாயினும் பழைய ஆந்திர அரசர்கள் வழங்கியதும் போற்றி வளர்த்ததுந் தமிழ் மொழியேயென்பது மட்டும் பழைய தமிழ் நூலாராய்ச்சியால் நன்கு புலனாகின்றது. இனி, இத்தென்றமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, நாகரிகத்தின் மிகச்சிறந்து, தமது தமிழ் மொழியை இலக்கண இலக்கிய வளன் உடையதாக்கி, அதனை நிரம்பவுந் திருத்தமாக வழங்கிய பழைய தமிழ் மக்கட்கும், வடக்கே சென்று குடியேறிய பழைய தமிழர்க்கும் இடையே போக்கு வரவு நிகழாமையால் வடக்கே சென்று வைகியவர் நாகரிகம் இல்லா தவராக,