________________
தொ.பரமசிவன் 99 ராஜாஜி மிகப் பெரிய பதவிகளைக் கட்சியிலும் ஆட்சியிலும் வகித்தார். ஆயினும் அரசியலில் பல தோல்விகளைத் தன் இறுதிக்காலம் வரையில் சந்தித்தார். ராஜாஜியின் மறைவிற்குப் பின்னால் அவரது ஆதரவாளர்களும் ஆதரவுப் பத்திரிகைகளும் தர்க்க நியாயங்களைக் காட்டி வெளிப்படையாகவும் மறைவாகவும் இந்து மதவெறிக் கட்சிகளுக்கு ஆதரவு தருவது கண் கூடு. பெரியார் ஈரோடு வெங்கடப்ப இராமசாமியாகப் பிறந்து நாயக்கர், ராமசாமி நாயக்கர் என்று எதிரிகளாலும் பெரியார், தந்தை பெரியார் என்று ஆதரவாளர்களாலும் அழைக்கப்பட்ட பெரியார் தமிழகத்தின் அறியப்பட்ட ஈராயிரம் ஆண்டு வரலாற்றில் ஒரு தனித்த மாமனிதராக விளங்கியவர். இருபதாம் நூற்றாண்டு மாமனிதர் அவரே ஆவார். திருவள்ளுவர்,திருநாவுக்கரசர், இராமானுசர் எனத் தமிழ்நாடு புதிய புதிய விடுதலைச் சிந்தனையாளர்களைப் பெற்றதுண்டு. ஆனால் சிந்தனையாளராகவும் செயல் வீரராகவும் வாழ்ந்த, தமிழக வரலாற்றில் சமுதாய வீரர் அவர் ஒருவரே ஆவர். களத்திலே மாய்ந்த பெருவீரனைப் போல தனது 94வது வயதில் வீதியில் தன்னுடைய கருத்துப் போரை நிகழ்த்திவிட்டு வீதியிலிருந்தே மருத்துவமனைக்கு மரணத்தை நோக்கிப் பயணமானவர். பெரியாரின் தந்தை ஈரோட்டில் கூலித் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி கோடீசுவரரானார். செல்வக் குடும்பத்தில் பிறந்த பெரியார் சிறு வயதிலே சிந்தனையாளர்களுக்குரிய எதிர்ப்புணர்வும், முரட்டுத்தனமும் மிகுந்தவராக இருந்தார். எனவே 13 வயதிற்குள் அவரது பள்ளிப்படிப்பு நின்று போனது வியப்பான செய்தியல்ல. 37 வயதில் ஈரோடு நகரசபைத் தலைவரானார். அக்காலத்தில் சேலம் நகரசபைத் தலைவராக இருந்த ராஜாஜியால் காங்கிரசுக் கட்சிக்கு கொண்டு வரப்பட்டார்.அக்காலத்தில்(1917) காங்கிரசில் பார்ப்பனரல்லாத பெருந்தலைவர்களாக இருந்த திரு.வி.க. (முதலியார்) பி.வரதராசுலு நாயுடு ஆகியோரோடு மற்றுமோர் பார்ப்பனரல்லாதோர் தலைவரானார். திராவிட இயக்க மூவர்களில் ஒருவரான டாக்டர் டி.எம்.நாயர் தன்னுடைய புகழ் பெற்ற ஸ்பர்டாங் பேருரையில்(1919) ஈரோடு இராமசாமி நாயக்கர் போன்றோர்கள் ரசை விட்டு வெளியேறி வர வேண்டும்' என்று இவரை அடையாளம் கண்டு அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் என்ற காங்கிர